சக்கரையிலிருந்து மாமிசம் வரை எல்லாமே நோ தான். தனது பிட்னஸ் சீக்ரட் குறித்து பேசிய – விராட் கோலி

Kohli
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி தனது உடலை எந்த அளவிற்கு கட்டுக்கோப்பாக வைத்துள்ளார் என்பது நாம் அறிந்ததே. ஆரம்ப காலத்தில் உணவு பிரியராக இருந்த விராட் கோலி எடை அதிகரித்து சற்று பருமனாகவே இருந்தார். அதனால் அவர் கிரிக்கெட் விளையாடும் போது சில அசவுகரியங்களையும் சந்திக்க நேர்ந்தது. அதன் பின்னர் கடந்த பல ஆண்டுகளாக அசைவ உணவுகளை நிறுத்திவிட்டு சரியான உணவு பழக்க வழக்கம் மற்றும் உடற்பயிற்சி ஆகியவற்றின் மூலம் தனது உடலை கட்டுக்கோப்பாக மாற்றினார்.

Kohli

- Advertisement -

பிட்னஸில் அதிக கவனம் செலுத்திய பிறகு அவரது ஆட்டமும் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது. அப்போதிலிருந்து தற்போது வரை தனது உடலை மிகச் சிறப்பாக மெயின்டைன் செய்து வரும் விராட் கோலி சரியான வழிமுறைகளை பின்பற்றி மற்ற இந்திய வீரர்களுக்கும் பிட்னஸில் ஒரு உதாரணமாக திகழ்ந்து வருகிறார்.

அதோடு தற்போது உள்ள இந்திய வீரர்கள் அனைவரும் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்கும் அவர் ஒரு முக்கியமான காரணமாக மாறினார். இந்நிலையில் தனது உடலை எவ்வாறு மிகக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார் என்பது குறித்த சில தகவல்களை விராட் கோலி பகிர்ந்துள்ளார். மேலும் தான் சாப்பிடும் உணவு பழக்க வழக்கங்கள் குறித்த கருத்துக்களையும் அவர் வெளிப்படையாக பேசியுள்ளார்.

kohli diet 1

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியதாவது : நான் உணவு மற்றும் உடற்பயிற்சி ஆகியவற்றில் கவனம் செலுத்தாத காலம் ஒன்று இருந்தது. ஆனால் அதன் பிறகு சில ஆண்டுகளிலேயே எனது உணவு பழக்கத்தை மாற்றி மிகவும் ஒழுக்கமாகிவிட்டேன். நான் இப்போதெல்லாம் சர்க்கரை எடுத்துக் கொள்வதில்லை. அதோடு குளுட்டன் இல்லாத உணவுகளை மட்டுமே சாப்பிட்டு வருகிறேன்.

- Advertisement -

கூடுமானவரை பாலை தவிர்த்து விடுவேன். அதோடு வயிறு நிறையும் சாப்பிடும் பழக்கமும் கிடையாது. எவ்விதமான ஸ்னாக்ஸ்ஸும் சாப்பிடுவது கிடையாது. நிறைய காய்கறிகளை உண்பதால் அசைவ உணவை தொடுவதே இல்லை. என்னைப் போன்ற உணவுப் பிரியர்களுக்கு இது எளிது இல்லை என்றாலும் அவ்வாறு சரியான உணவுப் பழக்கத்தை கடைபிடித்து வந்தால் உங்கள் உடலில் சரியான மாற்றத்தை காண்பீர்கள்.

இதையும் படிங்க : IND vs ZIM : கேப்டன் பதவியில் இருந்து நீக்கினால் என்ன? பரவாயில்லை – பெருந்தன்மையுடன் பேசிய ஷிகார் தவான்

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது ஒரு அடிக்ட் தான். அந்த வகையில் நான் ஒரு நாள் கூட தவறாமல் உடற்பயிற்சி செய்து என்னுடைய உணவு பழக்கங்களிலும் சரியான நெறிமுறையை பின்பற்றி பிட்டாக இருக்கிறேன் என விராட் கோலி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement