IND vs ZIM : கேப்டன் பதவியில் இருந்து நீக்கினால் என்ன? பரவாயில்லை – பெருந்தன்மையுடன் பேசிய ஷிகார் தவான்

Dhawan-1
- Advertisement -

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நாளை ஆகஸ்ட் 18-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 22-ஆம் தேதி வரை ஜிம்பாப்வேயில் உள்ள ஹராரே நகரில் நடைபெற உள்ளது. ஏற்கனவே ரோஹித் சர்மா தலைமையிலான முதன்மை இந்திய அணியானது இம்மாத இறுதியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் ஆசிய கோப்பைக்காக தயாராகி வருகிறது.

INDvsZIM

- Advertisement -

இவ்வேளையில் ஷிகார் தவான் தலைமையில் இளம் வீரர்களைக் கொண்ட மற்றொரு இந்திய அணியானது இந்த ஜிம்பாவே தொடரில் பங்கேற்கும் என பிசிசிஐ தங்களது அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தின் மூலம் 15 பேர் கொண்ட அணி வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. அதோடு இந்த அணிக்கு வி.வி.எஸ் லக்ஷ்மணன் பயிற்சியாளராக செயல்படுவார் என்றும் அறிவித்திருந்தது.

இப்படி ஷிகார் தவான் தலைமையில் இந்திய அணி அறிவிக்கப்பட்டு ஜிம்பாப்வே சென்றடைந்த வேளையில் அடுத்த சில நாட்களிலேயே இந்திய அணியின் நட்சத்திர வீரரான கே.எல் ராகுல் முழு உடல் தகுதி அடைந்து விட்டதால் அவர் ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியில் இணைகிறார் என்றும் அதுமட்டுமின்றி அவரே கேப்டனாக செயல்படுகிறார் என்று பிசிசிஐ அறிவித்தது.

Dhawan

இதன் காரணமாக ஷிகார் தவான் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டார். இப்படி ஜிம்பாப்வே தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து தற்போது பேசியுள்ள ஷிகார் தவான் கூறுகையில் :

- Advertisement -

கே.எல் ராகுல் காயத்திலிருந்து மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. ராகுலின் வருகை இந்திய அணிக்கு கூடுதல் பலத்தை தரும். அவர் நமது அணியின் முக்கிய வீரர் ஆவார். உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக அவர் அணிக்கு திரும்பி இருப்பது நன்மையே. அவரது தலைமையின் கீழ் விளையாடுவதில் மகிழ்ச்சி. கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதில் எனக்கு எந்த வருத்தமும் கிடையாது.

இதையும் படிங்க : IND vs ZIM : சுந்தருக்கு பதிலாக தேர்வான சபாஸ் அஹமத் யார் – சான்ஸ் பெற்றுக்கொடுத்த 4 உள்ளூர் செயல்பாடுகள் இதோ

இந்திய அணிக்காக என்னுடைய பங்களிப்பை வழங்க வேண்டும் என்பதில் மட்டுமே என்னுடைய எண்ணம் இருக்கிறது. எனவே ராகுலின் தலைமையின் கீழ் விளையாடுவதில் எனக்கு எந்த பிரச்சனையும் கிடையாது என பெருந்தன்மையுடன் ஷிகார் தவான் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement