IND vs ZIM : சுந்தருக்கு பதிலாக தேர்வான சபாஸ் அஹமத் யார் – சான்ஸ் பெற்றுக்கொடுத்த 4 உள்ளூர் செயல்பாடுகள் இதோ

Shahbaz-ahmed
- Advertisement -

ஜிம்பாப்வேவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஆகஸ்ட் 18, 20, 22 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. தலைநகர் ஹராரேயில் நடைபெறும் இந்தத் தொடருக்காக அறிவிக்கப்பட்ட கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய அணி ஏற்கனவே அங்கு சென்று வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ள இந்த அணியில் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் தொடரில் வைட்வாஷ் வெற்றியை பெற்றுக்கொடுத்த பெரும்பாலான வீரர்கள் இடம் பிடித்துள்ளதால் நல்ல பார்மில் இருக்கும் இந்தியா இந்த தொடரிலும் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தொடரில் இடம் பிடித்திருந்த தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் காயத்தால் கடைசி நேரத்தில் வெளியேறினார். ஐபிஎல் 2022 தொடரில் காயத்தால் வெளியேறி அதிலிருந்து குணமடைந்து இங்கிலாந்தின் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் அசத்தியதால் மீண்டும் தேர்வு செய்யப்பட்ட அவர் கடைசி நேரத்தில் மீண்டும் காயமடைந்ததால் பரிதாபமாக வெளியேறியுள்ள நிலையில் அவருக்கு பதில் மற்றொரு வீரர் சபாஷ் அஹமத் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

- Advertisement -

ஹரியானாவைச் சேர்ந்த இவர் 2018 முதல் விஜய் ஹசாரே கோப்பை போன்ற உள்ளூர் தொடர்களில் பெங்கால் அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை முதல்தர கிரிக்கெட்டில் 1041 ரன்களை 41.64 என்ற பேட்டிங் சராசரியில் எடுத்துள்ள அவர் பந்து வீச்சிலும் 19.47 என்ற நல்ல சராசரியில் வீசும் பகுதிநேர பவுலராகவும் திகழ்கிறார். மேலும் ஒருநாள் போட்டிகளை மையமாக கொண்ட லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 47.28 என்ற நல்ல பேட்டிங் சராசரியையும் 4.43 என்ற சிறப்பான பவுலிங் எக்கனாமியையும் பதிவு செய்து நல்ல ஆல்-ரவுண்டராக காட்சியளிக்கிறார்.

4 திருப்பு முனைகள்:
இருப்பினும் ஐபிஎல் 2022 தொடரில் பெங்களூரு அணிக்காக இவர் 219 ரன்களையும் 4 விக்கெட்டுகளையும் எடுத்து அசத்தியதே அனைவரின் கவனத்தை ஈர்த்தது. குறிப்பாக மிடில் ஆர்டரில் தினேஷ் கார்த்திக் உடன் இணைந்து நிறைய போட்டிகளில் அதிரடியாக பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல இளம் திறமையாக தன்னை அடையாளப்படுத்தினார். இந்த நிலைமையில் இந்திய அணிக்கு தேர்வாகும் அளவுக்கு தேர்வுக் குழுவினரின் கவனத்தை ஈர்த்த அவரின் 4 செயல்பாடுகளைப் பற்றி பார்ப்போம்:

- Advertisement -

4. சென்னையில் அசத்தல்: கடந்த 2021 ஐபிஎல் தொடரில் சுழலுக்கு சாதகமாக இருந்த சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஹைதராபாத் அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு மேக்ஸ்வெல் அதிரடியால் 149 ரன்கள் சேர்த்தது.

அதை துரத்திய ஹைதராபாத் 115/2 என நல்ல நிலையில் இருந்தபோது ஜானி பேர்ஸ்டோ, மனிஷ் பாண்டே ஆகிய 2 செட்டிலான பேட்ஸ்மேன்களை காலி செய்த இவர் இளம் வீரர் அப்துல் சமத்தையும் அவுட் செய்து 3 முக்கிய விக்கெட்டுகளை சாய்த்து பெங்களூரு வெறும் 6 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

3. அதிரடி 41: இந்த வருட ஐபிஎல் தொடரில் வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சிவம் துபே 95 ரன்கள் விளாசியதால் 20 ஓவர்களில் 216 ரன்களை குவித்தது. அதை துரத்திய பெங்களூருவுக்கு விராட் கோலி, டுப்லஸ்ஸிஸ், கிளென் மேக்ஸ்வெல் போன்ற முக்கிய வீரர்கள் சொதப்பியதால் 50/4 என மோசமான தொடக்கத்தை பெற்றது.

அப்போது மிடில் ஆர்டரில் களமிறங்கிய இவர் 4 பவுண்டரி உட்பட அதிரடியாக 41 (27) ரன்கள் குவித்து வெற்றிக்கு போராடினார். அவருடன் பிரபுதேசாய் 34, தினேஷ் கார்த்திக் 34 ஆகியோரும் கணிசமான ரன்கள் எடுத்த போதிலும் டாப் ஆர்டர் சொதப்பியதால் பெங்களூரு தோற்றது. இருப்பினும் அந்த போட்டியில் அதிகபட்ச ஸ்கோர் எடுத்த பெங்களூர் வீரராக அசத்திய சபாஸ் அஹமத் அன்றைய நாளில் தனது அதிரடியான பேட்டிங் திறமையை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

2. உள்ளூர் ஹாட்ரிக்: கடந்த 2020/21 சீசன் ரஞ்சி கோப்பையில் பெங்கால் அணிக்காக விளையாடிய இவர் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் அபாரமாக பந்துவீசி ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன் வாயிலாக முதல் முறையாக கவனம் பெற்ற அவர் ரஞ்சி கோப்பையில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்து 7வது பெங்கால் பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் பெற்றார்.

1. சூப்பர் சதம்: பொதுவாக சதமடித்தால் மட்டுமே ஒரு பேட்ஸ்மேன் தன்னை அடையாளப்படுத்த முடியும். அந்த வகையில் இந்த வருட ரஞ்சி கோப்பை அரையிறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மத்திய பிரதேசம் முதல் இன்னிங்சில் 341 ரன்கள் குவித்தது. அதன்பின் பேட்டிங் செய்த பெங்கால் ஒரு கட்டத்தில் 54/5 என மோசமான தொடக்கத்தை பெற்றது.

அப்போது மூத்த வீரர் மனோஜ் திவாரியுடன் ஜோடி சேர்ந்த இவர் சதமடித்து 116 ரன்கள் குவித்து வெற்றிக்காக போராடினார். இருப்பினும் இதர வீரர்கள் கைகொடுத்த தவறியதால் அப்போட்டியில் தோற்றாலும் அன்றைய நாளில் அவர் தனது பேட்டிங் திறமையை தேர்வுக் குழுவுக்கு வெளிப்படுத்தியதாலேயே இன்று இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளார்.

Advertisement