விராட் கோலி, சாம்சனை வைத்து இந்த மாற்றத்தை செஞ்சா டி20 உ.கோ ஜெய்க்கலாம்.. ஆர்பி சிங் ஐடியா

RP SIngh 2
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பை ஜூன் இரண்டாம் தேதி கோலாகலமாக துவங்குகிறது. இந்த தொடரில் களமிறங்கும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய முதல் போட்டியில் அயர்லாந்தை எதிர்கொளிக்கிறது. அதன் பின் ஜூன் ஒன்பதாம் தேதி நியூயார்க் நகரில் இந்தியா தங்களுடைய இரண்டாவது போட்டியில் பரம எதிரி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

முன்னதாக இந்த தொடரில் ஓபனிங்கில் ரோகித் சர்மா – விராட் கோலி ஆகியோர் களமிறங்க வேண்டும் என்று சௌரவ் கங்குலி போன்ற முன்னாள் வீரர்கள் தெரிவித்தனர். ஆனால் இடது – வலது கை பேட்ஸ்மேன்கள் தேவை என்பதால் ரோஹித் – ஜெய்ஸ்வால் தான் விளையாட வேண்டும் என்ற கருத்துக்கள் காணப்படுகிறது. அந்த சூழ்நிலையில் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் – ரிஷப் பண்ட் ஆகியோரில் விளையாடப் போவது யார் என்ற கேள்வியும் காணப்படுகிறது.

- Advertisement -

ஆர்பி சிங் ஐடியா:
இந்நிலையில் விராட் கோலி – ரோஹித் சர்மா ஓப்பனிங்கில் களமிறங்கினால் அந்த இருவருமே விளையாடலாம் என்று 2007 டி20 உலகக் கோப்பை வென்ற முன்னாள் வீரர் ஆர்பி சிங் தெரிவித்துள்ளார். இம்முறை கோப்பையை வெல்வதற்கான இந்திய அணியின் சிறந்த பேட்டிங் வரிசை பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “என்னைக் கேட்டால் ரோகித் சர்மாவுடன் விராட் கோலி ஓப்பனிங்கில் விளையாட விரும்புகிறேன்”

“100% சஞ்சு சாம்சன் 3வது இடத்தில் விளையாட வேண்டும். அவர்கள் இருவருமே பிளேயிங் லெவனில் விளையாடலாம். அதன் பின் 4, 5, 6வது இடங்களில் சூரியகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா ஆகியோர் விளையாடலாம். இது அணியின் சேர்க்கையை பொருத்தது. கேப்டன் மற்றும் பயிற்சியாளர் இது போன்ற வரிசையை தேர்ந்தெடுக்க வேண்டும். ஹர்திக் பாண்டியா ஐபிஎல் தொடரில் 4 ஓவர்கள் வீசி தம்மால் முடிந்ததை முயற்சித்தார்”

- Advertisement -

“அது முக்கியம். அணியின் சமநிலை என்று வரும் போது பாண்டியாவின் செயல்பாடுகள் முக்கியமாக இருக்கும். ஆரம்பத்திலேயே அவர் நல்ல ஃபார்மில் இருப்பது இந்திய அணிக்கு உதவும். கடந்த உலகக் கோப்பையில் தோல்வியை சந்தித்தது 100% இந்திய அணிக்கு உத்வேகத்தை மட்டுமே கொடுக்கும். ஏனெனில் கடைசியில் அவர்கள் ஒரு போட்டியில் மட்டுமே தோற்றனர்”

இதையும் படிங்க: நானும் ரோஹித் மட்டும் உலக சாதனையை செய்றோம்.. இம்முறை வங்கதேசம் வேற மாதிரி இருக்கும்.. ஷாகிப்

“கடந்த ஐபிஎல் தொடரில் இந்திய வீரர்களின் செயல்பாடுகள் நன்றாகவே இருந்தது. விராட் கோலி ஆரஞ்சு தொப்பியை வென்றார். பொதுவாக பெரிய போட்டிகளில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள் அசத்துவார்கள். அந்த வகையில் விராட் கோலி எப்போதுமே பெரிய போட்டியில் காலடி வைத்துள்ளார். எனவே இம்முறையும் பெரிய தொடரில் இந்தியா நன்றாக விளையாடுவார்கள்” என்று கூறினார்.

Advertisement