- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அவரோட ரெக்கார்ட் பேசும்.. அந்த 3 இந்திய வீரர்களும் ஆபத்தானவங்க.. இது எங்களோட கனவு.. ஜிம்பாப்வே கோச்

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அந்தத் தொடரில் ஹர்திக் பாண்டியா, சூரியகுமார் யாதவ், ஜஸ்ப்ரித் போன்ற நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே சுப்மன் கில் தலைமையில் 2024 ஐபிஎல் தொடரில் அசத்திய இளம் வீரர்களுடன் இந்தியா இத்தொடரில் களமிறங்குகிறது.

மறுபுறம் சிக்கந்தர் ராசா தலைமையில் இளமையும் அனுபவமும் கலந்த வீரர்களுடன் ஜிம்பாப்வே தங்களுடைய சொந்த மண்ணில் விளையாடுகிறது. எனவே முழு பலத்துடன் இல்லாத இந்திய அணியை இத்தொடரில் வீழ்த்துவதற்கு ஜிம்பாப்வே அணி போராட தயாராகியுள்ளது. இந்நிலையில் இத்தொடரின் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் தரமான வீரர் என்று ஜிம்பாப்வே பயிற்சியாளர் ஜஸ்டின் சமோன்ஸ் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

தரமான இந்திய வீரர்கள்:
அத்துடன் சிவம் துபே, ரிங்கு சிங், ரியான் பராக் ஆகியோர் மிடில் ஆர்டர்களில் அதிரடியாக விளையாடக்கூடிய ஆபத்தான வீரர்கள் என்பதை தாங்கள் அறிவோம் என்றும் அவர் கூறியுள்ளார். எனவே இத்தொடரில் கவனமாக விளையாடி இந்தியாவை தோற்கடிப்போம் என்று நம்பிக்கை தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “சுப்மன் கில் சூப்பரான கிரிக்கெட்டர். தென்னாப்பிரிக்கா அணியுடன் இருந்த போது அவரை நான் முதல் முறையாக பார்த்துள்ளேன் என்று நினைக்கிறேன்”

“2021 டிசம்பர் மாதம் இந்தியாவுக்கு எதிராக நாங்கள் டெஸ்ட் தொடரில் விளையாடினோம். அத்தொடரில் விளையாடாவிட்டாலும் அவர் மிகுந்த ஆர்வத்துடன் பயிற்சி செய்ததை நான் பார்த்துள்ளேன். அவரைப் பற்றி அவருடைய ரெக்கார்ட் பேசுகிறது. இன்னும் சில இந்திய வீரர்கள் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வீரர்களாக இருக்கின்றனர். அவர்கள் தங்களுடைய பெயரில் நிரூபிக்கப்பட்ட ரெக்கார்டை வைத்துள்ளனர்”

- Advertisement -

“எனவே எங்களுடைய வளரும் இளம் வீரர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகும். குறிப்பாக இந்தியா போன்ற உலகின் சிறந்த அணிக்கு எதிராக விளையாடுவது எப்போதும் உங்களுடைய கனவாக இருக்கும். அதே போல ரியான் பராக் எந்தளவுக்கு ஆபத்தானவர் என்பதை ஐபிஎல் தொடரில் பார்த்தோம். அங்கே அவர் தன்னுடைய தரத்தை காண்பித்தார்”

இதையும் படிங்க: மனஷனா பாக்காம ரசிகர்கள் மோசமா திட்டுனாங்க.. ஒவ்வொரு முறையும் ஹர்டிக் இதை செஞ்சுருக்காரு.. க்ருனால் பாண்டியா

“இந்தியாவைப் பொறுத்த வரை அது மற்றும் ஒரு நல்ல அம்சமாகும். எங்களைப் பொறுத்த வரை இது சிறந்த வீரர்களுக்கு எதிராக விளையாடுவதற்கு கிடைத்த நல்ல வாய்ப்பாகும்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இந்தத் தொடரின் முதல் போட்டி ஜூலை 6ஆம் தேதி இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு ஜிம்பாப்வே தலைநகர் ஹராரே நகரில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -