மனஷனா பாக்காம ரசிகர்கள் மோசமா திட்டுனாங்க.. ஒவ்வொரு முறையும் ஹர்டிக் இதை செஞ்சுருக்காரு.. க்ருனால் பாண்டியா

Krunal Pandya
- Advertisement -

ஐசிசி 2024 உலகக் கோப்பையை 17 வருடங்கள் கழித்து இந்திய கிரிக்கெட் அணி வென்றது. இந்த வெற்றிக்கு கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்ப்ரித் பும்ரா அனைவருமே முக்கிய பங்காற்றினர். அதே போல ஹர்திக் பாண்டியா 11 விக்கெட்டுகளையும் 144 ரன்களையும் எடுத்து வெற்றியில் கருப்பு குதிரையாகவும் ஆல் ரவுண்டராகவும் செயல்பட்டார்.

குறிப்பாக மாபெரும் இறுதிப் போட்டியில் கடைசி ஓவரில் டேவிட் மில்லரை சூரியகுமாரின் அபார கேட்ச்சால் அவுட்டாக்கி 16 ரன்களை கட்டுப்படுத்திய அவர் 3 விக்கெட்டுகளை எடுத்தார். அப்படி தாம் பணத்துக்காக மட்டும் விளையாடுபவன் அல்ல என்பதை நிரூபித்த பாண்டியா கண்ணீருடன் வெற்றியை கொண்டாடினார். ஏனெனில் கடந்த மே மாதம் 2024 ஐபிஎல் தொடரில் சுமாராக செயல்பட்டதால் பெரும்பாலான இந்திய ரசிகர்கள் அவரை கடுமையாக திட்டி கிண்டலடித்தனர்.

- Advertisement -

மனுஷன் தானே:
சொல்லப்போனால் ரோஹித்துக்கு பதிலாக கேப்டனாக நியமிக்கப்பட்டதால் மும்பை ரசிகர்களே தங்களுடைய கேப்டன் பாண்டியாவை கடுமையாக விமர்சித்தனர். இந்நிலையில் தம்முடைய சகோதரர் ஹர்திக் பாண்டியாவை ரசிகர்கள் கடுமையாக திட்டியதாக க்ருனால் பாண்டியா வைத்துள்ளார். இருப்பினும் அதிலிருந்து ஹர்டிக் கம்பேக் கொடுத்துள்ளதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி இன்ஸ்டாகிராமில் உருக்கமாக பதிவிட்டுள்ளது பின்வருமாறு.

“நானும் பாண்டியாவும் கிரிக்கெட்டை விளையாடத் துவங்கி ஒரு தசாப்தம் முடிந்து விட்டது. சில தினங்களாக நாங்கள் கண்ட கனவு நிஜமானதை போல் விசித்திரமாக இருக்கிறது. ஒவ்வொரு நாட்டினரைப் போலவே நானும் இந்த வெற்றியால் மகிழ்ந்திருக்கிறேன். என் இதயத்தில் இருக்கும் எனது சகோதரனுக்கு இதை விட என்னால் உணர்ச்சி வசப்பட முடியாது. கடந்த 6 மாதங்கள் அவருக்கு மிகவும் கடினமானது”

- Advertisement -

“அவர் தேவையற்ற தகுதியற்ற விஷயங்களுக்குள் சென்றார். ஒரு சகோதரராக அவருக்காக நான் வருந்தினேன். ரசிகர்கள் அவருக்கு எதிராக கூச்சலிட்டனர். அனைவரும் அவரை கேவலமாக பேசினார்கள். ஆனால் நாளின் முடிவில் அவரும் உணர்ச்சிகளைக் கொண்ட ஒரு மனிதர் என்பதை நாம் மறந்து விட்டோம். இருப்பினும் எப்படியோ அந்த மோசமான காலங்களை தன்னுடைய சிரிப்பால் கடந்த அவர் கடினமாக உழைத்து உலகக் கோப்பையில் தமக்கு தேவையானவற்றை செய்து ஜொலித்தார்”

இதையும் படிங்க: நீங்க 2 தான்.. நாங்க 4.. இந்தியாவை குறை சொல்லாம இங்கிலாந்துக்கு புத்தி சொல்லுங்க.. வாகனை விளாசிய சாஸ்திரி

“அதுவே அவருடைய இலக்கு. இந்தியா நீண்ட காலமாக காத்திருந்த வெற்றிக்காக அவர் தன்னுடைய இதயத்திலிருந்து விளையாடினார். நாட்டுக்காக விளையாடி உலகக் கோப்பை வெல்வதே 6 வயதிலிருந்து அவருடைய கனவு. அதை தன்னுடைய குறுகிய கேரியரிலேயே அவர் செய்துள்ளார் என்பதை மக்களுக்கு நான் நினைவு படுத்த விரும்புகிறேன். ஒவ்வொரு முறையும் ஹர்திக் பாண்டியாவை மக்கள் முடிந்து போனவர் என்று எழுதும் போது அதை உத்வேகமாக எடுத்துக் கொண்ட அவர் இன்னும் வலுவாக கம்வேக் கொடுத்துள்ளார்” என்று கூறினார்.

Advertisement