- Advertisement -
உலக கிரிக்கெட்

மழையால் ரத்தான ஜிம்பாப்வே ஐயர்லாந்து போட்டி.. அதிகாரபூர்வமாக வெளியேற்றப்பட்ட ஆஸ்திரேலியா – விவரம் இதோ

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி துவங்கிய ஐசிசி-யின் பத்தாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாடி வரும் இந்த மாபெரும் தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளது. அதனால் சூப்பர் 8 சுற்றுக்கு எந்தெந்த அணிகள் தகுதிபெறும்? என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது.

அதிகாரப்பூர்வமாக வெளியேறிய ஆஸ்திரேலிய அணி :

மொத்தமாக 20 அணிகள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் ஐந்து அணிகள் இடம் பெற்றிருந்தன. அப்படி இடம்பெற்றுள்ள நான்கு பிரிவுகளிலும் லீக் சுற்று ஆட்டங்களின் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெறும். அந்த வகையில் ஏ பிரிவில் ஏற்கனவே இடம் பெற்றிருந்த இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. அதேபோன்று ஏ பிரிவில் மற்றொரு அணியாக பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற வாய்ப்புள்ளது.

- Advertisement -

இந்நிலையில் குரூப் பி பிரிவில் இலங்கை அணி ஏற்கனவே நடைபெற்று முடிந்த மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெற்றதால் அந்த அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்ற வேளையில் அந்த பிரிவில் இரண்டாவது அணியாக எந்த அணி அடுத்த சுற்றுக்கு தகுதிபெறும்? என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. ஏனெனில் பி பிரிவில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணி இடம்பெற்றிருந்த வேளையில் ஏற்கனவே அவர்கள் மூன்று போட்டிகளில் இரண்டு தோல்விகளை சந்தித்து விட்டார்கள்.

அதேவேளையில் ஜிம்பாப்வே அணி இரண்டு வெற்றிகளை பெற்றிருந்தது. இந்நிலையில் இன்று ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெறயிருந்த வேளையில் அந்த போட்டி மழை காரணமாக ரத்தானது. இதன் காரணமாக ஜிம்பாப்வே அணிக்கு ஒரு புள்ளி வழங்கப்பட்டது. அந்த புள்ளியின் மூலம் தற்போது ஜிம்பாப்வே அணியானது சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது.

- Advertisement -

இதையும் படிங்க : டி20 உலககோப்பையில் மாபெரும் சாதனையுடன் சதமடித்த 19 வயது கனடா வீரர்.. யார் இவர்? – விவரம் இதோ

அதனால் ஆஸ்திரேலிய அணி கடைசி லீக் போட்டியில் விளையாடி வெற்றி பெற்றாலும் வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதேபோன்று குரூப் சி-யில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகளும், குரூப் டி-யில் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளும் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்று விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -