டி20 உலககோப்பையில் மாபெரும் சாதனையுடன் சதமடித்த 19 வயது கனடா வீரர்.. யார் இவர்? – விவரம் இதோ

Yuvraj Samra
- Advertisement -

நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற 31-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் கனடா ஆகிய அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்யாசத்தில் கனடா அணியை வீழ்த்தி அசத்தியது. அந்த வகையில் நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற கனடா அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

19 வயதில் சாதனை நிகழ்த்திய கனடா வீரர் :

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய கனடா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்களை குவித்தது. பின்னர் 174 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணி 15.1 ஓவரிலேயே 2 விக்கெட்டை மட்டும் இழந்து 176 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது கனடா அணி சார்பாக விளையாடிய 19 வயது துவக்க ஆட்டக்காரரான யுவ்ராஜ் சாம்ரா 65 பந்துகளை சந்தித்து 11 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர் என 110 ரன்கள் குவித்து அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் அடித்த இந்த சதத்தின் மூலம் சர்வதேச டி20 உலக கோப்பை தொடரில் மாபெரும் சாதனை ஒன்றினையும் நிகழ்த்தியுள்ளார்.

அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : டி20 உலக கோப்பை தொடரில் குறைந்த வயதில் சதம் அடித்த வீரராக பாகிஸ்தான் அணியை சேர்ந்த வீரரான அகமது செஷாத் முதல் இடத்தில் இருந்தார். அவர் தனது 22-ஆவது வயதில் சதம் அடித்ததே இதுவரை சாதனையாக இருந்தது.

- Advertisement -

இதையும் படிங்க : இன்னும் 5 விக்கெட்டுகள் மட்டுமே தேவை.. 4 ஆவது இந்திய வீரராக குல்தீப் யாதவ் – நிகழ்த்த காத்திருக்கும் சாதனை

இந்நிலையில் அவரது சாதனையை தற்போது முறியடித்துள்ள யுவ்ராஜ் சாம்ரா தனது 19-வது வயதில் டி20 உலக கோப்பை தொடரில் சதம் அடித்துள்ளார். அது மட்டுமின்றி ஒரு அசோசியேட் நாட்டில் இருந்து ஒரு வீரர் சதம் அடிப்பது இதுவே டி20 உலக கோப்பை வரலாற்றில் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement