இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் முதன்மை சுழற்பந்து வீச்சாளராக இருந்தாலும் தற்போதைய இந்திய டி20 அணியில் உலகின் நம்பர் ஒன் பந்துவீச்சாளரான வருண் சக்கரவர்த்தி மற்றும் துணை கேப்டனான அக்சர் பட்டேல் ஆகியோரது இருப்பு காரணமாக பிளேயிங் லெவனில் தொடர் வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வருகிறார்.
குல்தீப் யாதவ் நிகழ்த்த காத்திருக்கும் சாதனை :
ஆனாலும் அவ்வப்போது சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் கூடுதல் பந்துச்சாளராக செயல்படும் அவர் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக கொழும்பு நகரில் நடைபெற்ற போட்டியில் கூட அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில் சர்வதேச டி20 போட்டிகளில் நான்காவது இந்திய வீரராக குல்தீப் யாதவ் ஒரு மாபெரும் சாதனையை நிகழ்த்தும் வாய்ப்புக்காக காத்திருக்கிறார். அது குறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவணத்தை ஈர்த்து வருகிறது.
அந்த வகையில் அவர் நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் : கடந்த 2017-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச டி20 போட்டிகளில் அறிமுகமான அவர் இதுவரை 54 போட்டிகளில் விளையாடி 95 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். எனவே இன்னும் அவர் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில் சர்வதேச டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய நான்காவது இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை நிகழ்த்துவார்.
இதையும் படிங்க : மஹாசிவராத்திரி அன்று ஹார்டிக் பாண்டியா கட்டியிருந்த இந்த வாட்ச்சின் விலை என்ன தெரியுமா? – விவரம் இதோ
இவருக்கு முன்னதாக இந்திய அணி சார்பாக அர்ஷ்தீப் சிங், ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் ஹார்திக் பாண்டியா இந்த சாதனையை நிகழ்த்தியுள்ள வேளையில் நான்காவது இந்திய வீரராக இந்த பட்டியலில் அவர் இடம் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி தங்களது அடுத்த கடைசி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணிக்கு எதிராக விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.



