மஹாசிவராத்திரி அன்று ஹார்டிக் பாண்டியா கட்டியிருந்த இந்த வாட்ச்சின் விலை என்ன தெரியுமா? – விவரம் இதோ

Hardik Pandya
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் நட்சத்திர வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா எப்போதுமே விலையுயர்ந்த பொருட்களை பயன்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் ஏற்கனவே கோடி கணக்கில் மதிப்புடைய வாட்ச்களை அவ்வப்போது பயன்படுத்தி வரும் ஹார்டிக் பாண்டியா இந்த 2026 டி20 உலக கோப்பை தொடரிலும் சிவராத்திரி அன்று ஒரு ஸ்பெஷல் வாட்சை பயன்படுத்தி இருந்தார்.

சிவராத்திரி அன்று ஹார்டிக் பாண்டியா பயன்படுத்திய வாட்ச் :

தற்போது அந்த வாட்சின் விலை என்ன? அதில் இருக்கும் சிறப்பு அம்சம் என்ன? என்பது குறித்து தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த வகையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக கொழும்பு நகரில் நடைபெற்ற போட்டியின் போது தான் ஹார்டிக் பாண்டியா அந்த வாட்ச்சை பயன்படுத்தி இருந்தார்.

- Advertisement -

தற்போது அந்த வாட்ச் குறித்த விவரம் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த வகையில் மகராசிவராத்திரி தினத்தை ஒட்டி சிவனை சிறப்பிக்கும் வகையில் அவர் கையில் அணிந்திருந்த வாட்ச்சில் சிவன் முகம் பொறிக்கப்பட்ட டயலை அவர் பயன்படுத்தியிருந்தார்.

அந்த வாட்ச்சின் விலை இந்திய மதிப்பில் சுமார் 25 லட்ச ரூபாய் என்று கூறப்படுகிறது. மகா சிவராத்திரி அன்று சிவனை வழிபடும் நோக்கில் பலரும் யாகங்களில் ஈடுபட்டிருந்த வேளையில் ஹார்டிக் பாண்டியா சிவன் உருவம் பொறித்த வாட்ச்சை பயன்படுத்தியுள்ளது பலரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : பர்ஸ்ட் இதை பண்ணுங்க அப்புறம் தானா ரன் வரும்.. அபிஷேக் சர்மாவுக்கு அறிவுரை வழங்கிய – சுனில் கவாஸ்கர்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மட்டுமின்றி ஐபிஎல், விளம்பரம், தொழில் என ஏகப்பட்ட வருமானத்தை கொண்டுள்ள ஹார்டிக் பாண்டியா விலை உயர்ந்த பொருட்களை பயன்படுத்துவதில் பெரிய பிரியம் கொண்டவர். அந்த வகையில் தான் இந்த வாட்ச்சையும் அவர் பயன்படுத்தியுள்ளார்.

Advertisement