இந்திய அணியின் இளம் நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா கடந்த ஓராண்டாகவே கிட்டத்தட்ட 200 ஸ்ட்ரைக் ரேட்டுடன் அட்டகாசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வந்தார். அதன் காரணமாக சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலிலும் முதலிடத்தில் இருந்து வருகிறார். அதனால் நிச்சயம் அவர் 2026 டி20 உலக கோப்பை தொடரில் அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அபிஷேக் சர்மாவுக்கு அறிவுரை வழங்கிய : சுனில் கவாஸ்கர்
ஆனால் நடைபெற்று வரும் இந்த நடப்பு 2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் அமெரிக்க அணிக்கு எதிராக டக் அவுட்டாகிய அவர் நமீபியா அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியை உடல்நலக்குறைவு காரணமாக தவறவிட்டார். பின்னர் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக மீண்டும் அவர் அந்த போட்டியிலும் நான்கு பந்துகள் விளையாடி டக் அவுட்டாகி வெளியேறியிருந்தார்.
இப்படி அடுத்தடுத்து இரண்டு ஆட்டங்களில் அவர் டக் அவுட்டாகியுள்ளதால் அவரது பேட்டிங் மீது சில விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதே வேளையில் திறமை வாய்ந்த வீரரான அபிஷேக் சர்மா மீண்டும் இந்த தொடரில் பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று ஆதரவும் அவருக்கு பலரது மத்தியிலும் இருந்து வருகிறது.
இந்நிலையில் அபிஷேக் சர்மாவின் பேட்டிங் குறித்து சில அறிவுரைகளை முன்னாள் இந்திய வீரரான சுனில் கவாஸ்கர் வழங்கியுள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : என்னை பொறுத்தவரை அபிஷேக் சர்மாவிற்கு தற்போது தேவை எல்லாம் ஒரு சிங்கிள் தான். ஏனெனில் அவர் முதல் ஓவரிலேயே பெரிய ஷாட்டிற்கு செல்கிறார்.
இதையும் படிங்க : இலங்கை அணியின் அசத்தலான வெற்றியால் இந்தியாவிற்கு அடித்த அதிர்ஷ்டம் – விவரம் இதோ
அப்படி செல்லாமல் முதலில் ஒரு சிங்கிளை எடுத்து மறுபுறம் அவர் ரன் ஓடினால் அந்த ஒரு மொமன்டமே அடுத்து அவரை அதிரடியாக விளையாட கொண்டு செல்லும். எனவே இனிவரும் போட்டிகளில் அவர் முதலில் சிங்கிள் எடுத்து விட்டால் அதன் பின்னர் தனக்கே உரிய பாணியில் அதிரடியாக விளையாடி சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் விளாச முடியும் என அபிஷேக் ஷர்மாவிற்கு சுனில் கவாஸ்கர் அறிவுரை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.



