என்னாங்க அநியாம்? பிசிசிஐக்கு மட்டும் எப்டி இவ்ளோ பணம் போகுது, ஐசிசில ஓட்டு போட்ருக்கேன் – பாக் வாரிய தலைவர் பேட்டி

Zaka Asraf
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் முதன்மை அணிகளில் ஒன்றாக திகழும் இந்தியா விளையாட்டில் மட்டுமில்லாமல் பொருளாதார அளவிலும் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது என்று சொல்லலாம். ஒரு காலத்தில் கபில் தேவ் போன்றவர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் நட்சத்திர பாடகி லதா மங்கேஷ்கர் அவர்கள் இசை கச்சேரி நடத்தி கொடுத்த நிதியால் நிலைமையை சமாளித்து வந்த பிசிசிஐ 21ஆம் நூற்றாண்டில் ஐபிஎல் எனும் டி20 கிரிக்கெட் தொடரை பொருளாதார அளவில் மிகப்பெரிய வளர்ச்சி கண்டுள்ளது. ஏனெனில் ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு வருடமும் கோடிக்கணக்கில் வருமானம் கிடைப்பதால் விஸ்வரூப வளர்ச்சி கண்டுள்ள பிசிசிஐ இன்று சர்வதேச கிரிக்கெட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் அங்கமாக மாறியுள்ளது.

குறிப்பாக 60 போட்டிகள் கொண்ட தொடராக இருந்த ஐபிஎல் தற்போது 74 போட்டிகளாக பிசிசிஐ விரிவுபடுத்துவதற்கு ஐசிசி எந்த எதிர்ப்பும் சொல்ல முடியவில்லை. அந்தளவுக்கு ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற இதர நாடுகளை காட்டிலும் உலகிலேயே அதிகபட்சமாக இந்தியா தான் ஐசிசிக்கு அதிக வருமானத்தை சம்பாதித்து கொடுக்கிறது. அந்த நிலையில் ஒவ்வொரு வருடமும் கிடைக்கும் வருமானத்தை உறுப்பு நாடுகளின் வளர்ச்சிக்கு ஐசிசி பகிர்ந்து கொடுப்பது வழக்கமாகும்.

- Advertisement -

ஒட்டு போட்டுருக்கேன்:
அதில் கடந்த சில வருடங்களாகவே இதர நாடுகளை காட்டிலும் அதிக வருமானத்தை பெற்றுக் கொடுக்கும் இந்தியாவுக்கு அதிக வளர்ச்சி தொகையை பகிர்ந்து கொடுக்கும் வகையில் இந்த வருடம் புதிதாக ஒரு மாடலை ஐசிசி உருவாக்கியது. அதன்படி வரலாற்றிலேயே உச்சமாக ஐசிசியின் மொத்த வருமானத்திலிருந்து 38.5% இந்தியாவுக்கு பகிர்ந்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவை தவிர்த்து எஞ்சிய 12 பிரதான உறுப்பு நாடுகளுக்கு பெரும்பாலான வருமானமும் எஞ்சிய கணிசமான வருமானம் 94 அசோசியேட் வாரியங்களுக்கும் பகிர்ந்து கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு வழக்கம் போல சில நாடுகள் எதிர்ப்பை தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது போலவே முதல் ஆளாக பரம எதிரி பாகிஸ்தான் கிளம்பியுள்ளது. அதாவது இந்த புதிய மாடலுக்கு முன்னாள் வாரிய தலைவர் நஜாம் சேதி சம்மதம் தெரிவித்த நிலையில் தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள ஜாகா அஸ்ரப் எந்த வெளிப்படையான கணக்கும் விதிமுறையும் இல்லாமல் இந்தியாவிற்கு மட்டும் எவ்வளவு பணம் எப்படி செல்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

- Advertisement -

மேலும் தங்களுடைய நாட்டுக்கு கடந்த வருடத்தை விட இம்முறை இருமடங்கு வருமானம் கிடைத்த போதிலும் எஞ்சிய நாடுகளுக்கு ஏற்கனவே கொடுக்கப்பட்ட வருமானம் தற்போது குறைந்துள்ளதாகவும் அவர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். எனவே இது பற்றி ஐசிசியிடம் கேள்வி எழுப்பியத்துடன் மட்டுமல்லாமல் புதிய வருமான மாடல் சம்பந்தமாக நடைபெற்ற கூட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக வாக்கை பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கும் ஜாகா அஸ்ரப் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

“சமீபத்தில் நடைபெற்ற ஐசிசி கூட்டத்தில் நான் ஜெய் ஷா மற்றும் இதர நாடுகளின் உறுப்பினர்களை சந்தித்து சர்வதேச கிரிக்கெட்டை எப்படி முன்னோக்கி எடுத்துச் செல்வது என்பதை பற்றி விவாதித்தேன். அதனால் நாம் ஒன்றாக இணைந்து சிறப்பாக முன்னேறுவோம் என்று நம்புகிறேன். மேலும் இம்முறை ஐசிசியிடம் இருந்து கிடைக்கும் நமக்கான வருமான பகிர்வு இருமடங்காகியுள்ளது. ஆனால் அவர்கள் மற்ற நாடுகளின் வருமானத்தை குறைத்து இந்தியாவுக்கு அதிகமாக கொடுத்துள்ளதற்கு நாங்கள் எதிராக நிற்கிறோம்”

- Advertisement -

“அதற்கான எதிர்ப்பை தெரிவிக்கும் முடிவு ஓட்டையும் நான் செலுத்தியுள்ளேன். அத்துடன் நீங்கள் இந்தியாவுக்கு எப்படி இவ்வளவு வருமானத்தை கொடுக்கிறீர்கள் என்பதற்கான கணக்கு வழக்கை எங்களுக்கு கொடுக்கவில்லை என்று நான் ஐசிசியிடம் எதிர்ப்பு தெரிவித்தேன். அதற்கு அவர்கள் நஜாம் சேதியிடம் கணக்கை ஒப்படைத்து விட்டதால் அவரிடம் போய் கேட்டுக் கொள்ளுமாறு சொன்னார்கள்”

இதையும் படிங்க:உண்மைய சொல்லனும்னா என்னோட கண்டிஷன் இதுதான். உ.கோ தொடரில் விளையாடுவது குறித்து – கேன் வில்லியம்சன் பேட்டி

“அதை தொடர்ந்து அவரிடம் நான் இது பற்றி கேட்டதற்கு என்னிடம் எந்த கணக்கு வழக்கும் இல்லை என்று தெரிவித்தார். ஆனால் நஜாம் சேதியிடம் கணக்கை ஒப்படைத்து விட்டதாகவும் அதற்கு அவர் சம்மதம் தெரிவித்ததாகவும் ஐசிசி சேர்மன் 2 முறை சொன்னார்” என கூறினார். முன்னதாக 2023 ஆசிய கோப்பை விவகாரம் போலவே இந்த விவாதத்தில் பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தாலும் இதர நாடுகளின் ஆதரவு இந்தியாவுக்கு இருக்கும் என்பதால் எதுவும் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement