உண்மைய சொல்லனும்னா என்னோட கண்டிஷன் இதுதான். உ.கோ தொடரில் விளையாடுவது குறித்து – கேன் வில்லியம்சன் பேட்டி

Kane-Williamson
- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு அக்டோபர் 5-ஆம் தேதி முதல் நவம்பர் 19-ஆம் தேதி வரை ஐ.சி.சி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில் ஒரு சில அணிகளின் நட்சத்திர வீரர்கள் காயமடைந்து இருப்பது அந்தந்த அணிகளுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வகையில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் துவங்கிய ஐபிஎல் தொடரின் போது முதல் ஆட்டத்திலேயே எல்லைக்கோட்டின் அருகே பந்தை பிடிக்க நினைத்து முழங்காலில் காயமடைந்து அந்த தொடரில் இருந்து வெளியேறினார். அப்போது காயத்தின் தன்மை தீவிரமாக இருந்தால் உடனடியாக நாடு திரும்பிய அவர் காலில் ஆபரேஷன் செய்து கொண்டார். அதன்பிறகு கடந்த ஐந்து மாதங்களாக ஓய்வில் இருந்து வந்த அவர் தற்போது மீண்டும் பயிற்சி துவங்கி விட்டார்.

- Advertisement -

ஆனாலும் அவர் அக்டோபர் 5-ஆம் தேதி இந்தியாவில் துவங்கும் உலக கோப்பை தொடரில் அவர் விளையாடுவாரா? என்பதில் சந்தேகமே நிலவி வருகிறது. இந்நிலையில் இந்த விவகாரங்கள் குறித்து நேற்று கேன் வில்லியம்சன் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : உலக கோப்பையில் விளையாடுவது என்பது எப்போதுமே சிறப்பான ஒன்று.

அதற்கான உடற்தகுதியை எட்டுவதற்கு தான் பிசியோ மற்றும் பயிற்சியாளர்கள் என அனைவரும் வகுத்துள்ள ஒரு திட்டத்தினை சரியாக பயன்படுத்தி பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் நான் உலகக்கோப்பையில் பங்கேற்கும் வாய்ப்பு என்பது மிக மிக குறைவு.

- Advertisement -

காயத்திலிருந்து முழுமையாக மீண்டும் உலகக்கோப்பை அணிக்கு திரும்புவது என்பது உண்மையிலேயே கடினமான இலக்கு இருந்தாலும் உலக கோப்பையில் விளையாட வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஒரு உந்து சக்தியாக இருக்கிறது. தொடர்ந்து முன்னேற்றத்தை காண விரும்புகிறேன். எதையும் இப்போதைக்கு உறுதியாக கூற முடியாது என வில்லியம்சன் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : மனச தேத்திக்கோங்க சஞ்சு சாம்சன், அவர் விலகலனா உங்களுக்கு 2023 உ.கோ இடம் கிடைக்க வாய்ப்பே இல்ல – ஆகாஷ் சோப்ரா பேட்டி

இதன் காரணமாக அவர் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பது கடினம் என்றே கூறப்படுகிறது. 33 வயதான கேன் வில்லியம்சன் கடந்த 2019-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பையில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி அந்த அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றார். அதோடு அந்த தொடரின் சாம்பியன் பட்டத்தை தவறவிட்டிருந்தாலும் உலகக்கோப்பை தொடரின் தொடர் நாயகன் விருதினை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement