மனச தேத்திக்கோங்க சஞ்சு சாம்சன், அவர் விலகலனா உங்களுக்கு 2023 உ.கோ இடம் கிடைக்க வாய்ப்பே இல்ல – ஆகாஷ் சோப்ரா பேட்டி

Aakash-Chopra-and-Samson
- Advertisement -

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் 2023 ஐசிசி உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் கோலாகலமாக துவங்குகிறது. அதில் சொந்த மண்ணில் வலுவான திகழும் இந்தியா 2011 போல இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தியாவது கோப்பையை வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தோல்விகளை நிறுத்தமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதற்கு நிகராக இந்தியாவுக்கு கோப்பையை வென்று கொடுக்கப் போராடும் இந்திய அணியில் விளையாடப் போகும் வீரர்கள் யார் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

அதிலும் குறிப்பாக காலம் காலமாக வாய்ப்புக்காகவே ஏங்கி வரும் கேரளாவைச் சேர்ந்த சந்து சாம்சானுக்கு பேக்-அப் வீரராகவாவது வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு அவருடைய ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் 2015இல் அறிமுகமாகி தன்னுடைய 2வது போட்டியை 4 வருடங்கள் கழித்து விளையாடிய கொடுமையை சந்தித்த அவர் 2021 வரை குப்பையை போலவே பயன்படுத்தப்பட்டு வந்தார். இருப்பினும் மனம் தளராமல் ஐபிஎல் தொடரில் போராடி கடந்த வருடம் கிடைத்த வாய்ப்புகளில் அயர்லாந்து டி20 கிரிக்கெட் தொடரில் அரை சதமடித்து ஜிம்பாப்வே ஒருநாள் தொடரில் ஆட்டநாயகன் விருது வென்று அசத்திய அவருக்கு அதன் பின்பும் நிலையான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

- Advertisement -

மனச தேதிக்கோங்க:
அந்த நிலைமையில் கிடைக்கும் வாய்ப்புகளையும் அவர் சரியாக பயன்படுத்துவதில்லை என்ற விமர்சனங்கள் தற்போது நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் மீண்டும் நிரூபணமாகி வருகிறது. இது ஒருபுறம் இருக்க 2011 உலகக் கோப்பையில் கௌதம் கம்பீர், ரெய்னா, யுவராஜ் போன்ற இடது கை பேட்ஸ்மேன்கள் வெற்றியில் பங்காற்றிய நிலையில் தற்போதைய அணியில் ரோகித் முதல் பாண்டியா வரை அனைவருமே வலது கை வீரர்களாக இருக்கின்றனர்.

அதனால் வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் அறிமுகமாகி அசத்தும் திலக் வர்மாவுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று பெரும்பாலானவர்கள் ஆதரவு கொடுப்பதால் சஞ்சு சாம்சனுக்கு பேக்-அப் வீரராக கூட வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமாகியுள்ளது. இந்நிலையில் ரிஷப் பண்ட்டுக்கு பதிலாக விக்கெட் கீப்பராக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படும் கேஎல் ராகுல் விலகினால் மட்டுமே சஞ்சு சாம்சனுக்கு 2023 ஆசிய மற்றும் உலகக்கோப்பை அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கும் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா இல்லையென்றால் இடம் கிடைப்பதற்கு வாய்ப்பே இல்லை என தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மேலும் இதுவரை ஆசிய கோப்பை, உலகக்கோப்பை போன்ற எந்த ஒரு முதன்மையான தொடரிலும் வாய்ப்பு பெறாத சஞ்சு சாம்சன் 34 வயதுடையவர் கிடையாது என்பதால் 2024 டி20 உலகக்கோப்பை அணியில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாக அவர் கூறியுள்ளார். எனவே தற்போதைக்கு மனதை தேற்றிக் கொள்ளுமாறு தெரிவிக்கும் அவர் இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “தற்போதைய நிலைமையில் கேஎல் ராகுல் காயத்திலிருந்து குணமடைந்து தேர்வாகும் பட்சத்தில் சஞ்சு சாம்சன் உலகக்கோப்பை அணியில் இடம் பிடிப்பதை நான் பார்க்கப் போவதில்லை”

“அதன் காரணமாகவே அவர் ஆசிய கோப்பை அணியிலும் இடம் பிடிப்பார் என்று எனக்கு தோன்றவில்லை. இருப்பினும் ஒருவேளை ராகுல் விளையாடாமல் போனால் நீங்கள் நிச்சயமாக அவரை ஆசிய மற்றும் உலகக்கோப்பை அணியில் பார்ப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது. எனவே இவை அனைத்தும் கேஎல் ராகுல் விளையாடுகிறாரா இல்லையா என்பதை பொறுத்தே அமையும். இருப்பினும் அவருக்கு தற்போது 32 – 34 வயதாகிவிடவில்லை. சஞ்சு வெறும் 28 வயதுடையவர் என்பதால் எந்த பதற்றமும் தேவையில்லை”

இதையும் படிங்க:சுமாரான ஃபார்மில் இருந்தாலும் அவர் தான் அபாரமா விளையாடி 2023 உ.கோ ஜெயிச்சு கொடுக்க போறாரு – நட்சத்திர வீரர் மீது யுவி நம்பிக்கை

“ஏனெனில் 28 – 29 வயது பையனின் கேரியர் முடிவதை பற்றி இப்போதே நீங்கள் பேச முடியாது. மேலும் உங்களுக்கு 2024 டி20 உலகக் கோப்பை உட்பட வருங்காலங்களில் நிறைய வாய்ப்புகள் காத்திருக்கிறது” என்று கூறினார். முன்னாதாக சிறப்பாக செயல்படுவதற்கு முதலில் நிலையான வாய்ப்பு கொடுங்கள் என்று நிறைய விமர்சனங்கள் காணப்படும் நிலையில் சஞ்சு சாம்சனுக்கு இந்த முக்கிய தொடரிலும் வாய்ப்புகள் கிடைக்காது என்று தெரிய வருவது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைகிறது.

Advertisement