சுமாரான ஃபார்மில் இருந்தாலும் அவர் தான் அபாரமா விளையாடி 2023 உ.கோ ஜெயிச்சு கொடுக்க போறாரு – நட்சத்திர வீரர் மீது யுவி நம்பிக்கை

Yuvraj Singh 3
- Advertisement -

ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள ஐசிசி 2023 உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் கோலாகலமாக துவங்குகிறது. வரலாற்றில் முதல் முறையாக முழுவதுமாக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெறும் இத்தொடரில் வலுவான அணியாக திகழும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, வெற்றிகரமான ஆஸ்திரேலியா போன்ற எஞ்சிய கிரிக்கெட் அணிகளை சமாளித்து 2011 போல கோப்பையை வென்று கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடரில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் களமிறங்க உள்ளது.

இருப்பினும் ஜஸ்பிரித் பும்ரா போன்ற முதன்மை வீரர்கள் காயத்திலிருந்து குணமடைந்து இன்னும் களமிறங்காமல் இருப்பதும் 2019 உலக கோப்பையில் துவங்கி இன்னும் தீராத நம்பர் 4வது பேட்டிங் இடத்தில் விளையாடும் ஸ்ரேயாஸ் ஐயர் குணமடையாமல் இருப்பதும் அவருக்கான சரியான பேக் அப் வீரர் இல்லாமல் இருப்பதும் இந்தியாவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதே போல 2011இல் கோப்பையை வெல்ல கௌதம் கம்பீர், யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா போன்ற இடது கை பேட்ஸ்மேன்கள் முக்கிய பங்காற்றிய நிலையில் தற்போதைய அணியில் ரோஹித் சர்மா முதல் பாண்டியா வரை டாப் 6 பேட்ஸ்மேன்களும் வலது கைவீரர்களாக இருப்பது மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்த காத்திருக்கிறது.

- Advertisement -

யுவி நம்பிக்கை:
அவை அனைத்தையும் விட நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவான்களாகவும் பேட்டிங் துறையின் முதுகெலும்பாகவும் கருதப்படும் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் 2017 சாம்பியன்ஸ் ட்ராபி ஃபைனல், 2019 உலகக் கோப்பை செமி ஃபைனல் போன்ற முக்கிய போட்டிகளில் சொதப்பி இந்தியாவை கைவிடுவதில் எந்த முன்னேற்றமும் காணவில்லை என்பது 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் தோல்வி பிரதிபலித்தது. அதில் விராட் கோலியாவது 2019க்குப்பின் சதமடிக்காமல் இருந்த கதைக்கு முற்றுப்புள்ளி வைத்து அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் சதமடித்து 2022 டி20 உலக கோப்பையில் அதிக ரன்கள் அடித்து இந்தியாவின் வெற்றிக்கு போராடி நல்ல ஃபார்மில் இருக்கிறார்.

ஆனால் ஒரு காலத்தில் ஹிட்மேன் என கொண்டாடும் அளவுக்கு மிரட்டிய ரோகித் சர்மா 2019 உலகக் கோப்பையில் 5 சதங்கள் அடித்து உலக சாதனை படைத்த பின் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் சுமாராகவே செயல்பட்டு வருகிறார். குறிப்பாக கேப்டனாக முன்னின்று சிறப்பாக விளையாட வேண்டிய அவர் சுமாராக செயல்பட்டது 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பை போன்ற தொடர்களில் இந்தியாவுக்கு தோல்வியை கொடுத்தது.

- Advertisement -

அதனால் விமர்சனங்களை சந்தித்துள்ள அவர் அதற்கு இம்முறை சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வென்று பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் களமிறங்க உள்ளார். இந்நிலையில் தற்போது சுமாரான ஃபார்மில் இருந்தாலும் 2023 உலக கோப்பையில் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா கோப்பையை வென்று கொடுப்பார் என்று நம்புவதாக 2011 உலகக்கோப்பை நாயகன் யுவராஜ் சிங் ஆதரவு தெரிவித்துள்ளார்.

குறிப்பாக 2019 ஐபிஎல் தொடரில் எதிர்பார்த்ததை விட சுமாராகவே செயல்பட்ட ரோகித் 2019 உலகக் கோப்பையில் 648 ரன்கள் விளாசி அசத்தியதை போல் சொந்த மண்ணில் நடைபெறும் இந்த பெரிய தொடரில் சிறப்பாக செயல்படுவார் என்று நம்புவதாக தெரிவிக்கும் யுவராஜ் சிங் இது பற்றி சமீபத்திய யூடியூப் நிகழ்ச்சியில் பேசியது பின்வருமாறு. “ரோஹித் சர்மா தற்போது நல்ல ஃபார்மில் இல்லை என்பதை நான் புரிந்து கொள்கிறேன். இருப்பினும் கடந்த முறையும் 2019 உலக கோப்பைக்கு முன்பாக ஐபிஎல் தொடரில் அவர் நல்ல ஃபார்மில் இல்லை”

இதையும் படிங்க:அயர்லாந்து டி20 தொடரில் டிராவிட்டும் இல்லை, விவிஎஸ் லக்ஷ்மணும் விலகல் – அப்போ கோச் யார்? வெளியான அறிவிப்பு இதோ

“ஆனாலும் உலகக்கோப்பையில் அவரிடம் இருந்து ஏதோ ஸ்பெஷல் வரப்போகிறது என்று நான் சொன்னேன். அதே போலவே அந்த தொடரில் அவர் 4 – 5 சதங்கள் அடித்தார். எனவே இம்முறை நல்ல ஃபார்மில் இல்லையென்றாலும் உலக கோப்பையில் அவர் பெரிய அளவில் அபாரமாக செயல்படுவார் என்பது உங்களுக்கு தெரியாது. அனைத்தும் இங்கே ஏதோ ஒரு காரணத்திற்காக நடக்கிறது. இதுவே எனக்கும் 2011 உலக கோப்பைக்கு முன்பாக நடைபெற்றது. அதுவே சச்சின் என்னிடம் சொன்னதாகும்” என கூறினார்.

Advertisement