இன்னும் 2 வருஷம் ஆசையிருக்கு.. நான் கேப்டனா வந்ததும் இந்திய அணியில் அதை மாத்திட்டேன்.. ரோஹித் பேட்டி

Rohit Sharma 9.jpeg
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக விராட் கோலிக்கு பின் ரோஹித் சர்மா செயல்பட்டு வருகிறார். குறிப்பாக 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற காரணத்தால் கேப்டனாக பொறுப்பேற்ற அவர் இந்தியாவுக்கும் ஐசிசி கோப்பைகளை அள்ளித் தருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அவருடைய தலைமையில் 2023 ஆசிய கோப்பை மட்டுமே இந்திய அணி வென்றது.

ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2022 ஆசிய மற்றும் டி20 உலகக் கோப்பை தொடர்களில் அவருடைய தலைமையில் தோல்வியை சந்தித்த இந்தியா 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக் கோப்பை தொடர்களிலும் வெற்றி காணவில்லை. மற்றபடி சாதாரண இரு தரப்பு தொடர்களில் ரோஹித் சர்மா தலைமையில் எதிரணிகளை சொல்லி அடிக்கும் இந்தியா ஐசிசி தரவரிசையில் பெரும்பாலும் உலகின் நம்பர் ஒன் அணியாக திகழ்கிறது.

- Advertisement -

ரோஹித்தின் ஆசை:
இருப்பினும் ஐசிசி கோப்பையை வென்று கொடுக்கத் தவறியதால் அடுத்ததாக நடைபெறும் 2024 டி20 உலகக் கோப்பையே ரோஹித் சர்மா இந்தியாவின் கேப்டனாக செயல்படும் கடைசி தொடராக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இந்நிலையில் தாம் கேப்டனாக பொறுப்பேற்றதும் இந்திய அணியில் சொந்த சாதனைக்காக விளையாடும் எண்ணத்தை முற்றிலுமாக அகற்றியதாக ரோகித் சர்மா பெருமிதம் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் அணியாக சேர்ந்து விளையாடும் இந்தியா விரைவில் ஐசிசி கோப்பையை வெல்லும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவுக்காக இன்னும் சில வருடங்கள் விளையாட ஆசைப்படுவதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “கடந்த 17 வருடங்களாக இந்திய அணிக்காக விளையாடி வரும் என்னுடைய பயணம் அற்புதமாக இருக்கிறது. இன்னும் சில வருடங்கள் விளையாடி உலக கிரிக்கெட்டில் என்னால் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று நம்புகிறேன்”

- Advertisement -

“உங்களுடைய நாட்டுக்கு கேப்டனாக செயல்படுவது மிகப்பெரிய கௌரவமாகும். என்னைப் பொறுத்த வரை ஒருநாள் இந்தியாவின் கேப்டனாக நான் இருப்பேன் என்று எப்போதும் நினைத்ததில்லை. ஆனால் நல்ல மக்களுக்கு நல்ல விஷயங்கள் நடக்கும் என்று சொல்வார்கள். இந்தியாவின் கேப்டனாக நான் பொறுப்பேற்ற போது அனைவரும் ஒரு திசையை நோக்கி பயணிக்க விரும்பினேன்”

இதையும் படிங்க: 100 டைம்ஸ் பார்ப்பேன்.. என்னோட கேரியரில் எதிர்கொண்ட கஷ்டமான பவுலர் அவர் தான்.. ரோஹித் சர்மா வெளிப்படை

“அணி விளையாட்டை அப்படித்தான் விளையாட வேண்டும். அது சொந்த சாதனைகள், லட்சியங்களை பொறுத்தது கிடையாது. அது 11 வீரர்களும் சேர்ந்து மேஜையில் என்ன கொண்டு வந்து எப்படி கோப்பையை வெல்கிறோம் என்பதைப் பொறுத்தது. என்னுடைய வாழ்விலும் நிறைய மேடு பள்ளங்களை சந்தித்துள்ளேன். கடந்த காலங்களில் பார்த்த பள்ளங்களால் தான் இன்று ஒரு நல்ல மனிதராக இருக்கிறேன்” எனக் கூறினார்.

Advertisement