நம்பமுடியாத ஆட்டத்தை அவரு ஆடியிருக்காரு.. இன்னும் 45-50 ரன் அடிச்சா ட்ரிக்கி ஆயிடும் – இங்கிலாந்து வீரர் பேச்சு

Zak-Crawley
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது தற்போது இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டி கடந்த ஜனவரி 25-ஆம் தேதி ஹைதராபாத் நகரில் துவங்கியது.

அதன்படி நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்று முதலில் தங்களது முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 246 ரன்களுக்கு வீழ்ந்தது. அதனை தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய இந்திய அணியானது 436 ரன்களை குவித்தது.

- Advertisement -

பின்னர் 190 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை துவங்கிய இங்கிலாந்து அணியானது இந்திய அணியின் பந்துவீச்சில் எளிதில் சுருண்டு விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் போட்டியின் மூன்றாம் நாளான இன்று இங்கிலாந்து அணி ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 316 ரன்கள் குவித்து ஓரளவு போராட்டத்தை அளித்துள்ளது.

இதன் காரணமாக தற்போது இங்கிலாந்து அணி 126 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியின் போது இங்கிலாந்து அணி சார்பாக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஒல்லி போப் 148 ரன்களுடன் களத்தில் உள்ளதால் நிச்சயம் நான்காம் நாளன்று ரன் குவிப்பில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இதன் காரணமாக தற்போது இந்த போட்டியானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் மூன்றாம் நாள் போட்டி முடிந்து பேசிய இங்கிலாந்து அணி துவக்க வீரர் ஜாக் க்ராவுலி கூறுகையில் : இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஒல்லி போப் நம்ப முடியாத வகையில் மிகச்சிறப்பாக விளையாடினார். நிச்சயம் நாளை காலை அவர் மேலும் ரன்களை சேர்க்கும் பட்சத்தில் இந்திய அணிக்கு சேசிங்கில் சற்று சிரமத்தை ஏற்படுத்தவும் வாய்ப்பு இருக்கிறது.

இதையும் போய்டுங்க : லெஜெண்ட் பாண்டிங்கின் சாதனையை உடைத்த ரூட்.. இந்தியாவை சொல்லி அடிப்பதில் மாபெரும் உலக சாதனை

நிச்சயம் நான்காம் நாள் ஆட்டத்தில் நாங்கள் சற்று சுதாரித்து 45 முதல் 50 ரன்கள் வரை சேர்த்து விட்டால் இந்திய அணிக்கு எதிராக அது ஒரு போராட்டமான ஸ்கோராக இருக்கும். எனவே நிச்சயம் நாளை போப் மற்றும் ரேஹான் அகமது ஆகியோர் ரன் குவிப்பில் ஈடுபடுவார்கள் என க்ராவுலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement