லெஜெண்ட் பாண்டிங்கின் சாதனையை உடைத்த ரூட்.. இந்தியாவை சொல்லி அடிப்பதில் மாபெரும் உலக சாதனை

- Advertisement -

ஹைதராபாத் நகரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் மோதி வருகின்றன. அதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 246 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 70 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக அஸ்வின் 3, ஜடேஜா 3 விக்கெட்களை எடுத்தார்கள்.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா தங்களுடைய முதல் இன்னிங்ஸில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 436 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 80, கேஎல் ராகுல் 86, ரவீந்திர ஜடேஜா 87 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஜோ ரூட் 4 விக்கெட்களை எடுத்தார். அதன் பின் 190 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய இங்கிலாந்து மூன்றாவது நாள் முடிவில் 316/6 ரன்கள் எடுத்துள்ளது.

- Advertisement -

அசத்தும் ரூட்:
அந்த அணிக்கு ஜாக் கிராவ்லி 31, பென் டுக்கெட் 47, பென் ஃபோக்ஸ் 34 ரன்கள் எடுத்த நிலையில் அதிகபட்சமாக ஓலி போப் சதமடித்து 148* ரன்கள் விளாசி இந்தியாவுக்கு பெரிய சவாலை கொடுத்து வருகிறார். எனவே இந்தியா வெற்றி பாதைக்கு திரும்புவதற்கு தற்போது 126 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள இங்கிலாந்தை விரைவில் ஆல் அவுட் வேண்டிய நெருக்கடியில் உள்ளது.

முன்னதாக இப்போட்டியில் பேட்டிங்கில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த தவறிய இங்கிலாந்தின் நம்பிக்கை நட்சத்திரம் ஜோ ரூட் பந்து வீச்சில் 4 விக்கெட்களை எடுத்து முதன்மை ஸ்பின்னர்களை விட அட்டகாசமாக செயல்பட்டு வருகிறார். இருப்பினும் இந்த போட்டியில் மொத்தமாக எடுத்த 32 ரன்களையும் சேர்த்து இந்தியாவுக்கு எதிராக ஜோ ரூட் 26 போட்டிகளில் 2557 ரன்களை 60.88 என்ற அபாரமான சராசரியில் எடுத்துள்ளார்.

- Advertisement -

இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் டாப் அணிகளில் ஒன்றாக திகழும் இந்தியாவுக்கு எதிராக வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற ஆஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் சாதனையை தகர்த்துள்ள அவர் புதிய உலக சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ஜோ ரூட் : 2557*
2. ரிக்கி பாண்டிங் : 2555
3. அலெஸ்டர் குக் : 2431
4. க்ளைவ் லாய்ட் : 2344
5. ஜாவேத் மியாண்டட் : 2228

இதையும் படிங்க: 12 ஆண்டுகள் கழித்து இந்திய அணிக்கு தண்ணி காட்டிய இங்கிலாந்து வீரர் படைத்த சாதனை – விவரம் இதோ

அத்துடன் ஏற்கனவே இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் (2535) சாதனையையும் அவர் இப்போட்டியின் முதல் நாளிலேயே உடைத்திருந்தார். அந்த வகையில் இந்தியாவுக்கு எதிராக ஜோ ரூட் சொல்லி அடித்து எப்போதுமே சிறப்பாக செயல்பட்டு வருவது இதிலிருந்து நன்றாக தெரிவது குறிப்பிடத்தக்கது.

Advertisement