12 ஆண்டுகள் கழித்து இந்திய அணிக்கு தண்ணி காட்டிய இங்கிலாந்து வீரர் படைத்த சாதனை – விவரம் இதோ

Pope-and-Cook
- Advertisement -

கடந்த ஜனவரி 25-ஆம் தேதி ஹைதராபாத் நகரில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கிய இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. போட்டியின் மூன்று நாள் ஆட்டம் இன்று நிறைவடைந்துள்ள வேளையில் நாளை நான்காம் நாள் ஆட்டத்திலேயே போட்டியின் முடிவு தெரிந்துவிடும் அளவிற்கு ஆட்டம் சுவாரஸ்யமாக நகர்ந்து வருகிறது.

அந்த வகையில் இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்று முதலில் தங்களது முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணியானது 246 ரன்களை மட்டுமே குவிக்க அடுத்ததாக விளையாடிய இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தங்களது முதல் இன்னிங்சில் 436 ரன்கள் குவித்தது.

- Advertisement -

இதன் காரணமாக 190 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் தங்களது இரண்டாவது இன்னிங்சை துவங்கிய இங்கிலாந்து அணியானது எளிதில் இந்திய அணியிடம் வீழ்ந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இங்கிலாந்து வீரர்களும் இந்திய அணிக்கு பதிலடி தரும் விதமாக சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

குறிப்பாக மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணியானது தங்களது இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை இழந்து 316 ரன்களை எடுத்துள்ளதால் 126 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளனர். இதற்கு காரணமாக போட்டி நாளைய நான்காம் நாளன்று இன்னும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது இங்கிலாந்து அணி சார்பாக இரண்டாவது இன்னிங்ஸ்சில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அந்த அணியின் முன்னணி வீரரான ஒல்லி போப் 208 பந்துகளை சந்தித்து 17 பவுண்டர்கள் உதவியுடன் 148 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்.

இதையும் படிங்க : 610 ரன்ஸ்.. 23 ஃபோர்ஸ் 5 சிக்ஸ்.. தமிழ்நாட்டுக்காக பாதி ரன்களை தனி ஒருவனாக அடித்த ஜெகதீசன்

அவர் அடித்த இந்த சதத்தின் மூலம் அற்புதமான சாதனை ஒன்றினையும் அவர் நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் கடந்த 2012-ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிராக இரண்டாவது இன்னிங்சின் போது இங்கிலாந்து முன்னாள் கேப்டன் அலைஸ்டர் குக் 176 ரன்களை அடித்திருந்தார். அதைத்தொடர்ந்து 12 ஆண்டுகள் கழித்து இந்திய அணிக்கு எதிராக ஒரு வெளிநாட்டு வீரர் இரண்டாவது இன்னிங்சில் சதம் அடிப்பது இதுவே முதல்முறை.

Advertisement