அப்படி பேசுனது தப்பு தான் மன்னிச்சுடுங்க.. இந்தியாவை விட்டு வெளியேறிய பாக் தொகுப்பாலினி அறிக்கை

- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 14ஆம் தேதி நடைபெறும் 12வது லீக் போட்டியில் ஆசிய கண்டத்தின் பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளது அனைவரிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக 1992 முதல் இதுவரை இந்தியாவை உலகக்கோப்பை சந்தித்த 7 போட்டிகளிலும் பாகிஸ்தான் அவமான தோல்விகளை சந்தித்து வருகிறது.

எனவே இம்முறை அந்த அனைத்து தோல்விகளுக்கும் சொந்த மண்ணில் இந்தியாவை தோற்கடித்து முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற முனைப்புடன் பாகிஸ்தான் களமிறங்குகிறது. மறுபுறம் 2023 ஆசிய கோப்பையில் 228 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா இம்முறை தங்களுடைய சொந்த மண்ணில் பாகிஸ்தானை தோற்கடித்து 8வது தொடர் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் விளையாட உள்ளது.

- Advertisement -

மன்னிப்பு அறிக்கை:
முன்னதாக இத்தொடரை தொலைக்காட்சியில் தொகுத்து வழங்குவதற்காக பாகிஸ்தானை சேர்ந்த பிரபல தொகுப்பாளினி ஜைனப் அப்பாஸ் கடந்த வாரம் இந்தியாவுக்கு வந்திருந்தார். அப்போது கடந்த பல வருடங்களுக்கு முன்பாக இந்தியாவையும் இந்து மதத்தை பற்றியும் கேலி செய்வது போல் அவர் ட்விட்டரில் பதிவிட்ட பதிவுகளை தோண்டி எடுத்த இந்திய ரசிகர்கள் இப்போது மட்டும் ஏன் எங்கள் நாட்டுக்கு வந்தீர்கள் என்று விமர்சிக்க துவங்கினார்கள்.

அந்த சூழ்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென இந்தியாவிலிருந்து அவர் எவ்விதமான காரணத்தையும் சொல்லாமல் வெளியேறியது பரபரப்பு ஏற்படுத்தியது. இந்நிலையில் ஆன்லைனில் தமக்கு எதிராக ட்ரெண்டிங் செய்யப்பட்டதை நினைத்து பயந்து நாடு திரும்பியதாக தெரிவிக்கும் ஜைனப் அப்பாஸ் முந்தைய காலங்களில் இந்தியாவை பற்றி ட்விட்டரில் அவ்வாறு பதிவிட்டதற்காக மன்னிப்பு கேட்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு.

- Advertisement -

“நான் விரும்பும் விளையாட்டை தொகுப்பதற்காக பயணம் செய்வதை நல்ல வாய்ப்பாகவும் அதிர்ஷ்டமாகவும் நன்றியுள்ளவராகவும் கருதுகிறேன். இந்த உலகக் கோப்பை வாய்ப்பு சிறப்பு வாய்ந்ததாகும். ஆனால் ஆன்லைனில் வெளிப்படும் எதிர்வினையால் நான் பயத்தை உணர்ந்தேன். எனது பாதுகாப்புக்கு உடனடி அச்சுறுத்தல் இல்லை என்றாலும் என்னுடைய குடும்பத்தினரும் எல்லையின் இருபுறமும் உள்ள நண்பர்களும் கவலையடைந்தனர்”

இதையும் படிங்க: நாளைய பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச – பிளேயிங் லெவன் இதுதான் (லிஸ்ட் இதோ)

“அதனால் என்ன நடந்தது என்பதை பற்றி சிந்திக்க எனக்கு நேரமும் தேவைப்படுகிறது. மேலும் கடந்த காலங்களில் பரப்பப்பட்ட பதிவுகளால் ஏற்பட்ட காயத்தை நான் புரிந்து கொண்டு வருத்தத்தை தெரிவிக்கிறேன். அதே சமயம் அவர்கள் எனது மதிப்பையோ அல்லது இன்று நான் யார் என்பதையோ பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஆனாலும் அத்தகைய மொழிக்கு மன்னிப்புக்கான இடமில்லை. யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இந்த சவாலான சமயத்தில் உதவியவர்களுக்கு நன்றியுள்ளவளாக இருக்கிறேன். அன்புடன் ஜைனப்” என்று கூறியுள்ளார்.

Advertisement