நாளைய பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச – பிளேயிங் லெவன் இதுதான் (லிஸ்ட் இதோ)

IND-vs-PAK
- Advertisement -

இந்தியாவில் கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி துவங்கிய 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கோப்பையை கைப்பற்றும் முதன்மை அணியாக பார்க்கப்படும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது அக்டோபர் 8-ஆம் தேதி ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்ற முதலாவது போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் அந்த அணியை வீழ்த்தி தங்களது பயணத்தை அட்டகாசமாக துவங்கியது.

அதனை தொடர்ந்து அக்டோபர் 11-ஆம் தேதி டெல்லி மைதானத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியிலும் 8 விக்கெட் வித்தியாசத்தில் அவர்களை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்திருந்தது. இப்படி முதல் இரண்டு போட்டியிலே வெற்றி பெற்ற இந்திய அணி தற்போது நல்ல முமென்ட்டத்துடன் இந்த தொடரில் வெற்றி நடைபோட்டு வருகிறது.

- Advertisement -

அதனை தொடர்ந்து இந்திய அணியானது நாளை அக்டோபர் 14-ஆம் தேதி அகமதாபாத் நகரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட இருக்கிறது. எப்போதுமே இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றால் எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கும். அந்த வகையில் நாளைய போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

இந்நிலையில் நாளைய இந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஏதாவது மாற்றம் இருக்குமா? என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. அந்த வகையில் நாளைய இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்த உத்தேச பட்டியலை நாங்கள் இங்கே உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம்.

- Advertisement -

அந்த வகையில் ஏற்கனவே இந்திய அணி முதல் இரண்டு போட்டியிலும் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றுள்ளதால் நாளைய போட்டியில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்றும் அப்படி ஒரு மாற்றம் இருக்குமாயின் அது ஷர்துல் தாகூர் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக முகமது ஷமி இணைவது மட்டும் தான் என்று உறுதியாக நம்பலாம். அந்த வகையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : இந்தியா – பாக் போட்டியில் வெல்லப்போவது யார்? வரலாற்று புள்ளிவிவரம் சொல்வது என்ன? – விரிவான அலசல்

1) ரோஹித் சர்மா, 2) இஷான் கிஷன், 3) விராட் கோலி, 4) ஷ்ரேயாஸ் ஐயர், 5) கே.எல் ராகுல், 6) ஹார்டிக் பாண்டியா, 7) ரவீந்திர ஜடேஜா, 8) முகமது ஷமி, 9) குல்தீப் யாதவ், 10) ஜஸ்ப்ரீத் பும்ரா, 11) முகமது சிராஜ்.

Advertisement