இந்தியா – பாக் போட்டியில் வெல்லப்போவது யார்? வரலாற்று புள்ளிவிவரம் சொல்வது என்ன? – விரிவான அலசல்

IND vs PAk
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 14ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெறும் 12வது லீக் போட்டியில் பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஆசிய கண்டத்தின் பரம எதிரிகளான இவ்விரு அணிகளும் கிரிக்கெட்டை கௌரவாமாக கருதி வெற்றிக்காக ஆக்ரோசத்துடன் மோதிக் கொள்வார்கள் என்பதால் இப்போட்டியும் அனல் பறக்கும் என்று உறுதியாக நம்பலாம்.

இவ்விரு அணிகளை பொறுத்த வரை 2023 ஆசிய கோப்பையில் ஏற்கனவே பாகிஸ்தானை அடித்து நொறுக்கி கோப்பையையும் வென்ற இந்தியா தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாக இருக்கிறது. அதனால் ஏற்கனவே வலுவான ஆஸ்திரேலியாவை தோற்கடித்து ஆப்கானிஸ்தானையும் வீழ்த்திய இந்தியா புள்ளி பட்டியலில் 2 வெற்றிகளுடன் 3வது இடத்தில் இருக்கிறது. குறிப்பாக ரோகித் சர்மா, விராட் கோலி, ராகுல் போன்ற வீரர்களால் பேட்டிங் துறையில் மிகவும் வலுவாகவும் நல்ல ஃபார்மிலும் இருக்கிறது.

- Advertisement -

வெல்லப்போவது யார்:
அத்துடன் சுப்மன் கில் காய்ச்சலிலிருந்து குணமடைந்து தம்முடைய கோட்டையான அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் விளையாடினால் இந்திய பேட்டிங் அசைக்க முடியாததாக இருக்கும் என்றே சொல்லலாம். அதே போல ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சமீபத்திய போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு பேட்டிங், பவுலிங் ஆகிய 2 துறைகளையும் வெளிப்படுத்துகின்றனர்.

அவர்களுடன் பும்ரா, சிராஜ், ஷமி ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் தெறிக்க விடுவதற்கு நல்ல ஃபார்மில் தயாராக இருக்கும் நிலையில் குல்தீப் யாதவ் பாபர் அசாம், முகமத் ரிஸ்வான் போன்ற பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களை தன்னுடைய மாயாஜால சுழலால் திணறடிக்க தயாராக இருக்கிறார். மறுபுறம் பாகிஸ்தான் அணியை பொறுத்த வரை பேட்டிங்கில் முகமது ரிஸ்வான், அப்துல்லா சபிக் ஆகியோர் கடந்த போட்டியில் சதமடித்த உதவியுடன் இலங்கைக்கு எதிராக 345 ரன்களை சேசிங் செய்து உலக சாதனை படைத்தது.

- Advertisement -

ஆனால் அவர்களை தவிர்த்து பகார் ஜமான், இமாம்-உல்-ஹக், கேப்டன் பாபர் அசாம் ஆகியோர் நெதர்லாந்து மற்றும் இலங்கைக்கு எதிரான கடந்த 2 போட்டி வெற்றிகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் சுமாரான ஃபார்மில் இருக்கின்றனர். மேலும் ஸ்பின்னராக சடாப் கான் இன்னும் முழுமையான ஃபார்முக்கு திரும்பாத நிலையில் ஷாஹீன் அப்ரிடி, ஹரிஷ் ரவூப் ஆகியோர் அச்சுறுத்தலை கொடுத்தாலும் கடந்த போட்டிகளில் ரன்களை வாரி வழங்கியது பாகிஸ்தானுக்கு பின்னடைவாக இருக்கிறது.

இருப்பினும் இந்தியாவை தோற்கடிக்கும் அளவுக்கு அந்த அணியிடம் தரம் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும் சொந்த மண்ணில் எப்போதுமே கில்லியாக திகழும் இந்தியா வலுவான ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது போல இப்போட்டியிலும் 8வது முறையாக பாகிஸ்தானை உலகக் கோப்பையில் தோற்கடித்து வெற்றி பயணத்தை தொடரும் என்று உறுதியாக சொல்லலாம்.

- Advertisement -

வரலாற்று புள்ளிவிவரம்:
1. ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இதுவரை மொத்தம் 134 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் பாகிஸ்தான் 73 முறை வென்று முன்னிலையில் இருக்கும் நிலையில் இந்தியா 56 போட்டியில் வென்றது. 5 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டது. மேலும் கடைசி 5 போட்டிகளில் இந்தியா 4 முறை வென்ற நிலையில் 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது. அதை விட உலகக்கோப்பை வரலாற்றில் இதுவரை சந்தித்த 7 போட்டிகளிலும் பாகிஸ்தானை தோற்கடித்து இந்தியா வெற்றி நடை போட்டு வருகிறது.

2. ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டிகளில் அதிக ரன்கள் (2526) அடித்த வீரராக ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சாதனை படைத்துள்ளார். மேலும் பாகிஸ்தானுக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த இந்திய வீரராக விராட் கோலி (183) சாதனை படைத்துள்ளார்.

இதையும் படிங்க: ஐ.பி.எல் ஆடனப்பவே எனக்கு இந்த பிட்சை பத்தி தெரியும். அதிரடி ஆட்டம் குறித்து – ஆட்டநாயகன் டி காக் பேட்டி

3. அதே போல ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிக விக்கெட்கள் (54) எடுத்த இந்திய வீரராக அனில் கும்ப்ளேவும் சிறந்த பவுலங்கை (5/16) பதிவு செய்த இந்திய வீரராக சௌரவ் கங்குலியும் சாதனை படைத்துள்ளனர். மேலும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பதிவு செய்துள்ள அதிகபட்ச ஒருநாள் ஸ்கோர் : 356/2 ரன்களாகும்.

Advertisement