புற்றுநோயே ஒன்னும் செய்யல.. எனர்ஜி டானிக் கொடுத்துருக்கேன்.. கில் பாகிஸ்தானுக்கு எதிரா ஆடுவாரு.. யுவி உறுதி

yuvraj singh 2
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இதுவரை நடைபெற்ற 2 போட்டிகளில் 2 வெற்றிகளை பதிவு செய்துள்ள இந்தியா அடுத்ததாக பரம எதிரி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. அக்டோபர் 14ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெறும் அந்த போட்டியில் வென்று 1992 முதல் இதுவரை பாகிஸ்தானிடம் தோற்காமல் இருந்து வரும் கௌரவத்தை இந்தியா காப்பாற்றுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் அந்த போட்டியில் நட்சத்திர துவக்க இளம் வீரர் சுப்மன் கில் விளையாடுவாரா என்ற சந்தேகம் காணப்படுகிறது. ஏனெனில் காய்ச்சல் காரணமாக அவர் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் விளையாடவில்லை. இருப்பினும் சென்னையில் சிகிச்சைகளை முடித்த அவர் நேற்று அகமதாபாத் நகருக்கு சென்று ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வலைப்பயிற்சியில் ஈடுபட்டார்.

- Advertisement -

யுவராஜ் நம்பிக்கை:
மேலும் ஐபிஎல் தொடரிலும் சர்வதேச அளவிலும் அகமதாபாத் மைதானத்தில் ஏராளமான ரன்கள் அடித்துள்ள அவர் அம்மைதானத்தை தன்னுடைய கோட்டையாக வைத்துள்ளார். எனவே இந்த போட்டியில் அவர் விளையாடுவது இந்தியாவுக்கு மிகப்பெரிய சாதகமாக அமைந்து வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் என்றே சொல்லலாம். இந்நிலையில் 2011 உலகக்கோப்பையில் புற்றுநோயுடன் விளையாடியது போல உங்களால் இம்மறை சாதிக்க முடியும் என்று கில்லிடம் பேசியதாக யுவராஜ் சிங் கூறியுள்ளார்.

இந்த சூழ்நிலையில் விளையாடுவது கடினம் என்றாலும் இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் மேடம் வாய்ப்பை தவற விடாதீர்கள் என்று அவரிடம் உத்வேகமாக பேசி எனர்ஜி டானிக் கொடுத்துள்ளதாக தெரிவிக்கும் யுவராஜ் சிங் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “சுப்மன் கில்லுக்கு நான் பலத்தை கொடுத்துள்ளேன். உலகக்கோப்பையில் நான் புற்றுநோயுடன் விளையாடியதாக அவரிடம் சொன்னேன்”

- Advertisement -

“எனவே அவர் விரைவில் இந்திய அணியுடன் இணைந்து விளையாடுவதற்கான பலத்தை நான் கொடுத்துள்ளேன். அதனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அவர் விளையாடுவார் என்று நம்புகிறேன். பொதுவாக நீங்கள் காய்ச்சலுடன் விளையாடுவது மிகவும் கடினம் என்ற நிலைமையை நானும் என்னுடைய கேரியரில் சந்தித்துள்ளேன். எனவே அவர் ஃபிட்டாகும் பட்சத்தில் நிச்சயம் விளையாடுவார் என்று நம்புகிறேன்”

இதையும் படிங்க: ஐ.பி.எல் ஆடனப்பவே எனக்கு இந்த பிட்சை பத்தி தெரியும். அதிரடி ஆட்டம் குறித்து – ஆட்டநாயகன் டி காக் பேட்டி

“தற்போதைய நிலைமையில் ஏற்கனவே ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து இந்தியா நல்ல தன்னம்பிக்கையுடன் இருக்கிறது. குறிப்பாக ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சிறந்த சதமடித்தார். அதே போல இலங்கைக்கு எதிராக பாகிஸ்தான் 300 ரன்கள் துரத்தி சிறப்பான தன்னம்பிக்கையை கொண்டிருக்கிறது. முகமது ரிஸ்வான் சதமடித்ததால் பாகிஸ்தான் அணியும் நல்ல தன்னம்பிக்கையுடன் இருக்கிறது” என்று கூறினார்.

Advertisement