பருமனான சோம்பேறின்னு கிண்டலடிச்சதுக்கு.. 5 பந்தில் 19 ரன்ஸ் அடிச்சு அவரை பழி வாங்கினேன்.. லிவிங்ஸ்டன் பேட்டி

Liam Livingston
- Advertisement -

இங்கிலாந்தில் பிரபலமான ஹண்ட்ரட் லீக் கிரிக்கெட் தொடரின் 2025 சீசன் நடைபெற்று வருகிறது. அந்தத் தொடரில் ஆகஸ்ட் 12ஆம் தேதி பர்மிங்கம் மைதானத்தில் 10வது லீக் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் பர்மிங்கம் ஃபோனிக்ஸ் மற்றும் ஓவல் இன்விசிபில்ஸ் மோதின. அதில் முதலில் விளையாடிய ஓவல் 100 பந்துகளில் 180/8 ரன்கள் குவித்து அசத்தியது.

அதிகபட்சமாக ஜோர்டன் ஹாக்ஸ் 44 (30), டோனவன் பெரிரா 63 (29), ரசித் கான் 16 (9) ரன்கள் விளாசினார்கள். பர்மிங்கம் அணிக்கு அதிகபட்சமாக ஆடம் மில்னே, ட்ரெண்ட் போல்ட், ஹோவல் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தார்கள். அடுத்து விளையாடிய பர்மிங்காம் அணி 98 பந்துகளிலேயே 182/6 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

- Advertisement -

கிண்டல் செய்த கரண்:

அந்த அணிக்கு ஓப்பனிங் பேட்ஸ்மேன் வில் ஸ்மித் 51 (29) ரன்கள் அடித்து அசத்தினார். அதே போல மிடில் ஆர்டரில் கேப்டன் லியாம் லிவிங்ஸ்டன் அதிரடியாக 69* (27) ரன்கள் விளாசி வெற்றியில் முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார். ஓவல் அணிக்கு அதிகபட்சமாக சாகிப் மஹ்முத் 3 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை.

அப்போட்டியின் முடிவில் இங்கிலாந்து வீரர் டாம் கரண் தம்மை உடல் பருமனான சோம்பேறி என்ற வகையில் கிண்டலடித்ததாக லியாம் லிவிங்ஸ்டன் தெரிவித்தார். அதனால் டெத் ஓவரில் வந்தால் அவரை அடித்து நொறுக்க முடிவெடுத்ததாகவும் லிவிங்ஸ்டன் கூறினார். அதே போல 91 – 95 வரையிலான பந்துகளை வீசுவதற்கு டாம் கரன் வந்தார்.

- Advertisement -

பழி வாங்கிய லிவிங்ஸ்டன்:

அவருக்கு எதிராக ஆரம்பத்திலேயே 2 சிக்ஸர்களை தெறிக்க விட்ட லிவிங்ஸ்டன் அடுத்த பந்தில் பவுண்டரி அடித்தார். பின்னர் டபுள் மற்றும் சிங்கிள் எடுத்த அவர் 5 பந்துகளில் 19 பந்துகள் அடித்து தம்மை கிண்டலடித்த டாம் கரணுக்கு பதிலடி கொடுத்து பழி தீர்த்தார். இது பற்றி போட்டியின் முடிவில் பிபிசி 2 சேனலில் லிவிங்ஸ்டன் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க: என் பெயர் பேபி ஏபிடி கிடையாது.. இதை செஞ்சு பெயர் வாங்குறதே என் இலக்கு.. தெ.ஆ வீரர் ப்ரேவிஸ் பேட்டி

“என் மேலே ஏன் டாம் கரண் அவ்வளவு கிண்டல்களை தெளித்தார் என்ற ஐடியா எனக்கு இல்லை. அவர் என்னுடைய நல்ல நண்பர்களில் ஒருவர். ஆனாலும் அவர் என்னை கொழுத்த சோம்பேறி அல்லது அது போன்ற சில வார்த்தைகளை சொல்லி அழைத்தார். அதனால் நீங்கள் டெத் ஓவரில் பவுலிங் செய்ய வரக்கூடாது என்று நினைத்தேன். ஆனால் அவர் பவுலிங் செய்ய வந்தார். அதைப் பயன்படுத்தி நான் செய்ய விரும்பியதை மகிழ்ச்சியாக செய்தேன்” என்று கூறினார்

Advertisement