அதுக்கு மேல செய்ய ஒன்னுமில்ல.. 2023 உலகக் கோப்பையில் தோற்க இது தான் காரணம்.. டிராவிட் பேட்டி

Rahul Dravid
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி வென்று சாதனை படைத்தது. கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற அத்தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் அசத்திய இந்தியா தோல்வியே சந்திக்காமல் வெற்றி பெற்றது. குறிப்பாக இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா 17 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டத்தை முத்தமிட்டது.

அதனால் 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வந்த தொடர் தோல்விகளையும் இந்தியா உடைத்தது. அந்த வெற்றியால் 2023 உலகக் கோப்பை தோல்வியிலிருந்து இந்திய ரசிகர்கள் மீண்டு வந்தனர் என்றே சொல்லலாம். ஏனெனில் அந்தத் தொடரிலும் ரோஹித் சர்மா தலைமையில் அதிரடியாக விளையாடிய இந்தியா தொடர்ந்து 10 வெற்றிகளை பெற்றது.

- Advertisement -

10 வெற்றியும் 1 தோல்வியும்:

அதனால் 2011 போல சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியா ஃபைனலில் ஆஸ்திரேலியாவிடம் சொதப்பி தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் 2024 டி20 உலகக் கோப்பையை போலவே 2023 உலகக் கோப்பையிலும் இந்தியா விளையாடியதாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார். இருப்பினும் ஃபைனலில் அதிர்ஷ்டம் இல்லாததால் தோல்வியை சந்தித்ததாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

“2023 உலகக் கோப்பையில் எதையும் நான் வித்தியாசமாக செய்ய விரும்பவில்லை. ஏனெனில் ரோஹித் சர்மா தலைமையில் அனைவரும் முழுமையான ஈடுபாட்டுடன் அற்புதமாக விளையாடினார்கள். அதை விட அந்தத் தொடருக்காக நாங்கள் இன்னும் சிறப்பாக தயாராகி, திட்டமிட்டு அதை செயல்படுத்தி விளையாடியிருக்க முடியாது. ஏனெனில் நாங்கள் விரும்பிய வழியில் விளையாடியதாலேயே தொடர்ந்து 10 வெற்றிகளை அதிரடியாக பெற்றோம்”

- Advertisement -

தோல்விக்கான காரணம்:

“அதனால் அத்தொடரில் நான் எதையும் மாற்ற விரும்ப மாட்டேன். சொல்லப்போனால் அணி மீட்டிங்கில் இதைத் தாண்டி நம்மால் என்ன வித்தியாசமாக செய்ய முடியும்? என்று நாங்கள் பேசினோம். நாங்கள் அதே ஆற்றலுடன், அதே வேகத்தில், அதே சூழ்நிலையில் விளையாட விரும்பினோம். மேலும் அந்த நாளில் (ஃபைனல்) கொஞ்சம் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று நம்பினோம். இறுதிப் போட்டியிலும் நாங்கள் அசத்தினோம்”

இதையும் படிங்க: 2024 டி20 உ.கோ ஜெய்க்க அந்த 3 பேர் காரணம்.. ஐபிஎல் மாதிரி கோப்பைகளை அடுக்குவேன்.. ரோஹித் பேட்டி

“இருப்பினும் அன்று ஆஸ்திரேலியா எங்களை விட சிறப்பாக விளையாடியது. அதற்காக அவர்களுக்கு வாழ்த்துக்கள். அது விளையாட்டில் நடக்கும். அது தான் விளையாட்டு” என்று கூறினார். அந்த வகையில் தொடர் தோல்விகளை சந்தித்த ராகுல் டிராவிட் 2024 டி20 உலகக் கோப்பையை வென்று பயிற்சியாளராக சாம்பியன் பட்டத்துடன் ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement