2024 டி20 உ.கோ ஜெய்க்க அந்த 3 பேர் காரணம்.. ஐபிஎல் மாதிரி கோப்பைகளை அடுக்குவேன்.. ரோஹித் பேட்டி

Rohit Sharma
- Advertisement -

ஐசிசி 2024 உலகக் கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வென்ற சாதனை படைத்தது. கடந்த ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற அத்தொடரில் தோல்வியை சந்திக்காமல் இந்தியா வெற்றி பெற்றது. குறிப்பாக மாபெரும் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா 17 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டம் வென்றது.

அந்த வெற்றிக்கு ஜஸ்ப்ரித் பும்ரா, விராட் கோலி ஆகியோரைப் போலவே ரோகித் சர்மா மிகவும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார். ஏனெனில் தனது சொந்த சாதனையை பற்றி கவலைப்படாமல் எதிரணிகளை அடித்து நொறுக்க வேண்டும் என்ற அணுகுமுறையை அவர் இந்திய அணியில் ஆழமாக விதைத்துள்ளார். அவருடைய அணுகுமுறையை பின்பற்றி விளையாடிய இந்தியா சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது.

- Advertisement -

3 தூண்கள்:

இந்நிலையில் 2024 டி20 உலகக் கோப்பை வெற்றிக்கு களத்தில் விளையாடிய வீரர்களை தாண்டி ஜெய் ஷா, ராகுல் டிராவிட், அஜித் அகர்கர் ஆகியோர் தூண்களாக இருந்ததாக ரோஹித் சர்மா பாராட்டியுள்ளார். குறிப்பாக பிசிசிஐ செயலாளர், பயிற்சியாளர், மற்றும் தேர்வுக்குழு தலைவராக அந்த மூவரும் இந்திய அணியில் மாற்றங்களை செய்வதற்கு ஒத்துழைப்பு கொடுத்ததாகவும் ரோஹித் தெரிவித்துள்ளார்.

அத்துடன் 5 ஐபிஎல் கோப்பைகளை குறுகிய காலத்தில் வென்றது தமக்கு பெரிய உத்வேகத்தை கொடுத்ததாகவும் ரோஹித் கூறியுள்ளார். அதே போல தற்போது டி20 உலகக் கோப்பையை வென்றுள்ள தாம் விரைவில் இந்தியாவுக்காக இன்னும் நிறைய ஐசிசி கோப்பைகளை வெல்வேன் என்று ரோஹித் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி சியட் 2024 விருதுகள் விழாவில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

கோப்பைகளை அடுக்குவேன்:

“சாதனைகள், முடிவுகள் போன்றவற்றை கவலைப்படாத அணியாக இந்தியாவை மாற்ற வேண்டும் என்பதே என்னுடைய கனவாகும். எதைப் பற்றியும் அதிகமாக சிந்திக்காமல் களத்தில் சுதந்திரமாக விளையாட வேண்டும் என்ற சூழ்நிலை அணியில் இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். அதுவே எங்களுக்கு தேவைப்பட்டது. அதற்காக மிஸ்டர் ஜெய் ஷா, ராகுல் டிராவிட், அஜித் அகர்கர் ஆகிய 3 தூண்களிடமிருந்து எனக்கு நிறைய உதவி கிடைத்தது”

இதையும் படிங்க: மத்த பேன்ஸ் மாதிரி இந்திய ரசிகர்கள் கிடையாது.. தனது தம்பிக்கு ஸ்ட்ரிக்ட் அட்வைஸ் கொடுத்த – அல்பி மோர்கல்

“அதுவே நான் செய்த விஷயங்களுக்கு முக்கியமானதாக இருந்தது. அதே சமயத்தில் பல்வேறு சூழ்நிலைகளில் வந்து இந்திய அணி சாதனை படைக்க உதவிய வீரர்களையும் மறந்து விடக்கூடாது. நான் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றதற்கு காரணம் இருந்தது. ஒருமுறை நீங்கள் போட்டிகளையும் கோப்பைகளையும் வென்று ருசி பார்த்து விட்டால் அதன் பின் நிற்க விரும்ப மாட்டீர்கள். எனவே எங்களைத் தொடர்ந்து தள்ளி வருங்காலத்தில் இன்னும் சிறப்பாக செயல்படுவோம்” என்று கூறினார்.

Advertisement