ரோஹித் சர்மா இப்படி தொடர்ச்சியாக வெற்றிகளை குவிக்க இதுவே காரணம் – ஜாஹீர் கான் கொடுத்த விளக்கம்

Zaheer
- Advertisement -

இந்திய அணியின் கேப்டனாக பல ஆண்டுகள் செயல்பட்டு வந்த விராட் கோலி ஐசிசி தொடர்களில் கோப்பையை வெல்ல முடியவில்லை என்கிற காரணத்தினாலும், தனது பேட்டிங் ஃபார்மில் ஏற்பட்ட சரிவு காரணமாகவும் மூன்று வகையான கிரிக்கெட்டில் இருந்தும் கேப்டன் பதவியை துறந்தார். அதேபோன்று ஐபிஎல் தொடரில் கூட அவர் கேப்டன் பதவியில் இருந்து வெளியேறினார். இந்நிலையில் விராத் கோலிக்கு அடுத்து இந்திய அணிக்கு மூன்று வகையான கிரிக்கெட்டிலும் தற்போது ரோகித் சர்மா கேப்டனாக பொறுப்பேற்ற விளையாடி வருகிறார்.

Rohith

- Advertisement -

கேப்டன் பொறுப்பு ஏற்றதில் இருந்து இந்திய அணியை தற்போது ரோகித் சர்மா தொடர்ச்சியாக வெற்றிக்கு அழைத்துச் செல்வது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. குறிப்பாக இந்திய மண்ணில் நடைபெற்று முடிந்த நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை ஆகிய தொடர்களில் ஒயிட்வாஷ் வெற்றியை ரோகித் சர்மா பெற்றார். அதே போன்று இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி அற்புதமான வெற்றிகளை குவித்தது.

இப்படி கேப்டன் பொறுப்பிலிருந்து தொடர்ச்சியாக ரோகித் சர்மா வெற்றிகளை குவித்து வருவதால் அவர் மீது இன்னமும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சர்வதேச கிரிக்கெட்டிற்கு முன்னதாக அவர் ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக சிறப்பான முறையில் கேப்டன்ஷிப் செய்துள்ளார். அவரது தலைமையில் மும்பை அணி அடுத்தடுத்து கோப்பைகளை கைப்பற்றி உள்ளது அவருக்கு பெரிய பெயரை பெற்றுக் கொடுத்துள்ளது.

Rohith

இந்நிலையில் ஐபிஎல் தொடரிலும் சரி, தற்போது சர்வதேச கிரிக்கெட்டிலும் சரி ரோகித் சர்மா இப்படி கேப்டனாக தொடர்ச்சியாக அடையும் வெற்றிக்கு என்ன காரணம் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஜாகிர் கான் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ரோகித் சர்மா ஒரு வீரர்களின் கேப்டன் என்று கூறலாம். ஏனெனில் அணியில் உள்ள ஒவ்வொரு வீரருக்கும் ரோகித் சர்மா உடனான தொடர்பு இருக்கும்.

- Advertisement -

எப்போது எந்த வீரரின் செயல்பாடு சற்று தொய்வு அடைந்தாலும் அவர்களிடையே சென்று பேசும் அவர் அணியில் உள்ள அனைத்து வீரர்களிடமும் தனிப்பட்ட நேரத்தை ஒதுக்கி அவர்களுக்காக பேசக்கூடியவர். மேலும் மீட்டிங்கின் போதும் சரியான முறையில் கலந்து கொண்டு பேசுவார். இப்படி வீரர்களுக்கு உண்டான நேரத்தை ஒதுக்கி அவருடன் உரையாடுவது தான் அவருக்கு வெற்றியை தேடிக் கொடுக்கிறது. இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவதிலும் சரி அவர்களை முன்னேற்றவும் சரி மும்பை சரியான வாய்ப்புகளை வழங்கி வருகிறது.

இதையும் படிங்க : ஐ.பி.எல் தொடரில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஸ்ட்ரைக் ரொட்டேஷன் விதி – அப்படின்னா என்ன தெரியுமா?

அந்த வகையில் ரோகித் சர்மா இனியும் நல்ல தலைவராக செயல்படுவார் என நம்புகிறேன் ஜாஹீர் கான் கூறினார். மேலும் இந்த ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் நடைபெற்று முடிந்த நேரத்தில் இளமையும், அனுபவம் கலந்த அணியை நாங்கள் உருவாக்கியுள்ளோம். எனவே இந்த ஆண்டும் சரி இனி வரப்போகும் ஆண்டும் சரி எங்கள் அணிக்கு அது நல்ல பலன் அளிக்கும் என்று அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement