ஐ.பி.எல் தொடரில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஸ்ட்ரைக் ரொட்டேஷன் விதி – அப்படின்னா என்ன தெரியுமா?

abd
- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் பதினைந்தாவது ஐபிஎல் தொடர் மார்ச் இருபத்தி ஆறாம் தேதி துவங்கி மே மாதம் 29 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இரண்டு மாதங்களுக்கு மேல் நடைபெற உள்ள இந்த மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவானது ரசிகர்களை பெரிய அளவில் குஷிப்படுத்தும் என்பது உறுதி. அதே வகையில் கடந்த ஆண்டு 8 அணிகளுடன் நடைபெற்ற இந்த தொடரானது இந்த ஆண்டு 10 அணிகளுடன் விளையாடப்பட இருப்பதால் ஏகப்பட்ட போட்டிகள் ரசிகர்களை மகிழவைக்க காத்திருக்கின்றது.

Ipl cup

- Advertisement -

இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடருக்கான சீசனில் புதிதாக கொண்டுவரப்பட்ட பல விதிமுறைகள் ஐபிஎல் நிர்வாகத்தால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதில் முக்கியமான விதியான ஸ்ட்ரைக் ரொட்டேஷன் என்பது ரசிகர்களிடையே மிகவும் குழப்பமாக ஒன்றாக இருக்கிறது. அதற்கான தெளிவான விளக்கத்தை நாங்கள் இந்த பதிவில் உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம்.

அதன்படி இந்த விதி சொல்வது யாதெனில் : பொதுவாக ஒரு பேட்ஸ்மேன் பந்தினை தூக்கி அடிக்கும் போது அது கேட்ச்க்கு செல்கிறது என்று வைத்துக்கொள்வோம். அப்படி தூக்கி அடிக்கப்பட்ட பந்து பீல்டரின் கைகளுக்கு செல்வதற்கு முன்னால் இரண்டு பேட்ஸ்மேன்களும் ஒருவரை ஒருவர் கிராஸ் செய்திருந்தால் எதிர் முனையில் இருக்கும் நான் ஸ்ட்ரைக்கர் அடுத்த பந்தில் பேட்டிங் செய்து கொள்ளலாம்.

sky 1

ஆனால் தற்போது கொண்டு வரப்பட்டுள்ள ஸ்ட்ரைக் ரேட்டேஷன் விதிப்படி நீங்கள் பந்து கேட்ச் செய்யப்படுவதற்கு முன்னதாக நீங்கள் ரன்னை ஓடி முடித்திருந்தாலும் பந்து கேட்ச் செய்யப்பட்டு விட்டால் புதிதாக வரும் வீரர்தான் நேரடியாக அடுத்த பந்தை எதிர்கொள்ள வேண்டும் இதுவே விதி கூறும் கருத்து.

- Advertisement -

அதேபோன்று ஓவரின் கடைசி பந்தில் கேட்ச் செய்யப்பட்டிருந்தால் அது கணக்கு கிடையாது. எதிர்முனையில் இருப்பவர் ஓவர் ரொட்டேஷன் முறையில் அடுத்த ஓவரில் பேட்டிங் செய்து கொள்ளலாம். தற்போது வெளியிடப்பட்டுள்ள விதிமுறை 18.11 விதி இதைத்தான் கூறுகிறது. எனவே இனி ஒரு பேட்ஸ்மென் கேட்ச் மூலம் ஆட்டமிழந்தால் புதிதாக வரும் வீரர்தான் அடுத்த பந்தை எதிர்கொள்ள முடியும் என்பதே இந்த விதி கூற வரும் கருத்து.

இதையும் படிங்க : யோ யோ டெஸ்ட்டில் தோல்வி அடைந்த பின்னர் ப்ரித்வி ஷா வெளியிட்ட பதிவு – பவுலர்களுக்கு மறைமுக மிரட்டல்

சர்வதேச கிரிக்கெட்டில் வரும் அக்டோபர் மாதம் முதல் இந்த விதி அறிமுகமாகும் என்றாலும் ஐபிஎல் தொடரில் இந்த சீசனில் ஐ.பி.எல் நிர்வாகத்தால் இந்த முறையானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement