யோ யோ டெஸ்ட்டில் தோல்வி அடைந்த பின்னர் ப்ரித்வி ஷா வெளியிட்ட பதிவு – பவுலர்களுக்கு மறைமுக மிரட்டல்

Shaw-1
- Advertisement -

ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 26-ஆம் தேதி முதல் துவங்கி மே 29-ஆம் தேதி வரை 2 மாதங்களுக்கும் மேல் ரசிகர்களுக்கு விருந்து படைக்க தயாராகி வருகிறது. இந்த வருடம் 10 அணிகள் விளையாட உள்ளதால் 74 போட்டிகள் கொண்ட பிரமாண்ட ஐபிஎல் தொடர் 65 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த வருடம் இந்தியாவிலேயே நடைபெறும் இந்த தொடரின் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்று மும்பை மற்றும் புனே ஆகிய நகரங்களில் மட்டும் நடைபெற உள்ளது.

Ipl cup

- Advertisement -

இதற்காக அறிவிக்கப்பட்டுள்ள முழு அட்டவணையின் படி முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்த தொடரில் கோப்பையை வெல்வதற்கான அனைத்து வேலைகளிலும் அந்தந்த அணி நிர்வாகங்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.

தயாராகும் வீரர்கள்:
இந்த தொடர் துவங்குவதற்கு இன்னும் 10 நாட்களே எஞ்சியுள்ள நிலையில் இதில் பங்கேற்பதற்காக மும்பையில் ஒன்றுக் கூடியுள்ள அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட தொடங்கியுள்ளனர். குறிப்பாக சமீபத்தில் இலங்கைக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரில் பங்கேற்ற ரோகித் சர்மா உள்ளிட்ட இந்திய வீரர்கள் நேரடியாக ஐபிஎல் தொடரில் விளையாட உள்ளனர்.

rohith 1

அதே சமயம் சமீப காலங்களில் இந்திய அணியில் விளையாடாமல் இருக்கும் வீரர்களுக்கு பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமியில் உடல்தகுதி தேர்வு நடத்தப்பட்டது. பொதுவாகவே ஐபிஎல் போன்ற எந்த ஒரு கிரிக்கெட் தொடரிலும் பங்கேற்பதற்கு முன்பாக இந்திய கிரிக்கெட் வீரர்களின் உடல் தகுதியையும், ஊக்கமருந்து பயன்படுத்தினார்களா என்பது போன்ற சோதனைகளை தேசிய கிரிக்கெட் அகடமியில் சோதிப்பது வழக்கமாகும்.

- Advertisement -

பெயிலான பிரிதிவி ஷா:
அந்த வகையில் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக இந்திய அணியில் விளையாடாமல் இருந்து வரும் ஹர்திக் பாண்டியா, பிரிதிவி ஷா போன்ற வீரர்கள் இந்த சோதனையில் கலந்து கொண்டார்கள். ஆங்கிலத்தில் யோ-யோ டெஸ்ட் என அழைக்கப்படும் இந்த உடல்தகுதி தேர்வில் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தேர்ச்சி பெற்றதால் ஐபிஎல் தொடரில் பங்கேற்பதுடன் பந்து வீசுவார் எனவும் நேற்று செய்திகள் வெளியாகின. ஆனால் மும்பையை சேர்ந்த இளம் இந்திய வீரர் பிரிதிவி ஷா இந்த தேர்வில் தோல்வி அடைந்ததாக தெரியவந்தது.

yo yo

பொதுவாக இந்த யோ-யோ டெஸ்டில் தேர்ச்சியடைய 16.5 புள்ளிகளை ஆடவர் வீரர்களுக்கு இலக்காகவும், 15 புள்ளிகளை மகளிர் வீராங்கனைகளுக்கு இலக்காகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் பிரிதிவி ஷா 16.5 புள்ளிகளை தொடாததால் இந்த சோதனையில் தோல்வி அடைந்தார்.

- Advertisement -

இருப்பினும் கூட அவர் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு எந்தத் தடையும் இல்லை என கூறப்பட்டது. ஆனாலும் யோ-யோ டெஸ்டில் தோல்வி அடைந்த அவர் முழு உடல் தகுதியுடன் இல்லாதது இதன் வாயிலாக தெரிய வந்தது. இதை அறிந்த பல இந்திய ரசிகர்கள் இந்த இளம் வயதிலேயே உடல் தகுதியை கட்டுக்கோப்புடன் வைக்க தவறிய பிரிதிவி ஷா’வை சமூக வலைதளங்களில் கிண்டல் அடிக்க தொடங்கினர்.

Shaw

குறிப்பாக வளர்ந்து வரும் வீரராகக் கருதப்படும் இவர் வருங்கால இந்திய அணியில் முக்கிய வீரராக விளையாடுவதற்கான சாத்தியக்கூறுகள் நிறைய உள்ளது. அப்படிப்பட்ட நிலையில் தனது உடல் தகுதியை கட்டுக்கோப்புடன் வைத்திருக்க வேண்டாமா என பல ரசிகர்கள் நியாயமான கேள்வியை எழுப்பினர்.

ஆட்டம் இனிமேல் தான் ஆரம்பம்:
இந்நிலையில் யோ-யோ டெஸ்டில் தோல்வி அடைந்த காரணத்தால் தன்னை யாரும் கிண்டலடிக்க வேண்டாம் என பதிலடி கொடுத்துள்ள பிரிதிவி ஷா இனிமேல்தான் ஆட்டம் ஆரம்பம் என எதிரணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுபற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் “தயவு செய்து எனது சூழ்நிலையை புரிந்து கொள்ளாமல் என்னை யாரும் மதிப்பிட வேண்டாம். நீங்கள் உங்களின் சொந்த கர்மாவை உருவாக்குகிறீர்கள்” என பதிவிட்டுள்ளார். அதாவது இந்த சூழ்நிலையில் இருந்து வெளிவந்து என்னால் எதிரணிகளுக்கு எதிராக சிறப்பாக செயல்பட முடியும் என கூறியுள்ள அவர் தம்மைப் பற்றி கவலைப்படாமல் உங்கள் வேலையை பாருங்கள் என கிண்டல் அடிப்பவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

Shaw

கடந்த 2018-ஆம் ஆண்டு நடந்த ஐசிசி அண்டர்-19 உலக கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்ட பிரிதிவி ஷா அதன் பின் 3 வகையான இந்திய அணியிலும் விளையாடினார். அந்த சமயத்தில் சச்சின், சேவாக், லாரா ஆகியோர் கலந்த கலவை என அப்போதைய பயிற்சியாளர் ரவிசாஸ்திரி இவரை பாராட்டியிருந்தார். அந்த அளவுக்கு திறமை வாய்ந்த இவர் கடந்த சீசன்களில் அதிரடியாக விளையாடியதால் அவரை டெல்லி கேபிட்டல்ஸ் அணி நிர்வாகம் மீண்டும் தக்கவைத்துள்ளது. மேலும் சமீபத்தில் நடந்த ரஞ்சி கோப்பையில் கூட மும்பை அணிக்காக தொடர்ச்சியாக 3 போட்டிகளில் விளையாடிய அவர் ஐபிஎல் தொடரில் கண்டிப்பாக கலக்குவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Advertisement