பிளான் பி இல்லையா? நமக்கும் அதே பிட்ச் தானே.. ரோஹித் கேப்டன்ஷிப் – இந்திய பவுலர்கள் மீது ஜஹீர் கான் அதிருப்தி

Zaheer Khan
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா கொஞ்சம் கூட போராடாமல் இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. அதனால் தென்னாப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக ஒரு டெஸ்ட் தொடரை வென்று சரித்திரம் படைக்கும் வாய்ப்பை மீண்டும் இந்தியா கோட்டை விட்டது.

முன்னதாக சென்சூரியன் நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் பேட்டிங் துறையில் கேஎல் ராகுல் மற்றும் விராட் கோலி ஆகியோர் மட்டுமே சிறப்பாக செயல்பட்டனர். அதே போல பவுலிங் துறையில் முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரை தவிர்த்து, பிரசித் கிருஷ்ணா சர்துல் தாகூர் ஆகியோர் மோசமாக செயல்பட்டது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

- Advertisement -

பிளான் பி இல்லையா:
அதை விட பேட்டிங்கில் மொத்தமாக சொதப்பிய ரோகித் சர்மா கேப்டனாகவும் பவுலர்களை பயன்படுத்திய விதம் தோல்வியை கொடுத்தது. குறிப்பாக 2வது நாள் உணவு இடைவேளைக்கு பின் முதன்மை பவுலர்களான சிராஜ் மற்றும் பும்ரா ஆகியோரை வைத்து எதிரணி பேட்ஸ்மேன்களை அட்டாக் செய்ய தவறிய அவர் தாக்கூர் – பிரசித் கிருஷ்ணா ஆகியோரை பயன்படுத்தினார்.

இந்நிலையில் முதல் இன்னிங்ஸில் 245 ரன்கள் எடுக்க திண்டாடிய அதே பிச்சில் தென் ஆப்பிரிக்கா 408 ரன்கள் குவிக்கும் அளவுக்கு தாக்கூர் மற்றும் பிரசித் கிருஷ்ண ஆகிய இந்திய பவுலர்கள் மோசமாக செயல்பட்டதாக முன்னாள் ஜாம்பவான் வீரர் ஜாகிர் கான் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் முதன்மை திட்டத்தில் பவுலர்கள் அடி வாங்கும் போது ஃபீல்டர்களை சரியான இடத்தில் நிறுத்தி குறைந்தபட்சம் ரன்களை கட்டுப்படுத்தி அழுத்தத்தை உண்டாக்கும் 2வது திட்டத்தை பின்பற்றாமல் கேப்டன் ரோஹித் சர்மா சுமாராக செயல்பட்டதாகவும் தெரிவிக்கும் அவர் இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“தென் ஆப்பிரிக்க சூழ்நிலைகளில் சரியான லென்த்தை தெரிந்து கொள்வது முக்கியமாகும். மேலும் விக்கெட்கள் எடுக்கலாமா அல்லது பேட்ஸ்மேன்களை அமைதியாக வைத்திருக்க வேண்டுமா என்பதில் தெளிவு வேண்டும். இப்போட்டியில் சர்துள் மற்றும் பிரசித் சரியான லென்த்தை கண்டறிய தவறினார்கள். குறிப்பாக உணவு இடைவெளிக்கு பின் தென்னாபிரிக்க பேட்ஸ்மேன்கள் நிறைய ஷாட்களை தூக்கி அடித்து எளிதாக ரன்கள் குவித்தனர்”

இதையும் படிங்க: இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ஏற்படவுள்ள 2 மாற்றங்கள் – விவரம் இதோ

“அது போன்ற சமயங்களில் இந்தியா பிளான் பி வைத்திருந்திருக்க வேண்டும். அல்லது ஃபீல்டர்களை சரியான இடத்தில் நிறுத்தி எதிரணி ரன் குவிப்பதை நிறுத்தியிருக்க வேண்டும். ஏனெனில் இந்தியா அடித்த ரன்களை தென் ஆப்பிரிக்கா கண்டிப்பாக தாண்டது என்பது போல் பிட்ச் இருந்தது. எனவே இந்திய பவுலர்கள் அமர்ந்து என்ன தவறு செய்தோம் என்பதை யோசிக்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement