இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ஏற்படவுள்ள 2 மாற்றங்கள் – விவரம் இதோ

IND
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது தென்னாப்பிரிக்க நாட்டில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்திய தென்னாப்பிரிக்க அணியானது மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.

அதோடு இந்த தொடரிலும் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அதனைத்தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது ஜனவரி 3-ஆம் தேதி துவங்க உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியில் நிச்சயம் இரண்டு முக்கிய மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஏற்கனவே முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளதால் இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்த தொடரை சமன் செய்ய முடியும்.

அப்படி இல்லையெனில் மீண்டும் ஒருமுறை தென்னாப்பிரிக்க அணியிடம் டெஸ்ட் தொடரை இழக்க நேரிடும். அந்தவகையில் முதலாவது டெஸ்ட் போட்டியின் போது மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்திய வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக முகேஷ் குமார் மீண்டும் டெஸ்ட் அணியில் இடம் பிடித்து விளையாடுவார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

அதேபோன்று தமிழக சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் முதலாவது டெஸ்ட் போட்டியின் போது முதுகு பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாகவே ஜடேஜா அந்த போட்டியில் இடம் பெறவில்லை என்று ரோகித் அறிவித்திருந்தார்.

இதையும் படிங்க : 2 ஆவது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக ரவீந்திர ஜடேஜா குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பி.சி.சி.ஐ – விவரம் இதோ

இவ்வேளையில் தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக மீண்டும் ரவீந்திர ஜடேஜா முழுஉடற்தகுதியை எட்டி விட்டதால் அவர்அணிக்குள் வந்து அஸ்வின் வெளியேற்றப்படுவார் என்று கூறப்படுகிறது. இப்படி இந்த இரண்டு முக்கிய மாற்றங்களுடன் இந்திய அணி இரண்டாவது போட்டியில் பங்கேற்கும் என்று தெரிகிறது.

Advertisement