இந்திய அணி இப்படி சரிவை சந்திக்க அவங்க 2 பேர் தான் காரணம். மோசமான பவுலிங் – ஜாஹீர் கான் சாடல்

Zaheer-Khan
- Advertisement -

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது சற்று தடுமாற்றமான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது என்றே கூறலாம். ஏனெனில் கே.எல் ராகுல் அடித்த சதத்தினை தவிர்த்து இந்திய அணியின் மற்ற எந்த பேட்ஸ்மேனும் பெரிய அளவில் ரன்களை குவிக்கவில்லை.

இதன் காரணமாக இந்திய அணி தங்களது முதல் இன்னிங்சில் 245 ரன்கள் மட்டுமே குவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடி வரும் தென்னாப்பிரிக்காது இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 256 ரன்கள் குவித்திருந்தது.

- Advertisement -

அதனைத்தொடர்ந்து தற்போது தென்னாப்பிரிக்க அணி மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடி வரும் வேளையில் மேலும் விக்கெட் எதையும் விட்டுக்கொடுக்காமல் டிக்கெட் இழப்பின்றி 320 ரன்களை கடந்து விளையாடி வருகிறது.

இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி இப்படி சரிவை சந்தித்ததற்கு பிரசித் கிருஷ்ணா மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோரின் தடுமாற்றமான பந்துவீச்சு தான் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான ஜாகீர் கான் கடுமையாக சாடியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் :

- Advertisement -

தென்னாப்பிரிக்க ஆடுகளத்தில் பந்துவீசும் போது எந்த லென்த்தில் வீச வேண்டும் என்பதை முன்கூட்டியே பவுலர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். மேலும் விக்கெட்டுகளை எடுக்க முடியவில்லை என்றால் பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பந்துவீச வேண்டும். இருவருமே எந்த லென்த்தில் பந்து வீசுவது என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.

இதையும் படிங்க : 16/4 என தெறிக்க விட்டு.. 20 ரன்னில் சொதப்பிய பாகிஸ்தான்.. போராடும் ஆஸி.. பரபரக்கும் 2வது டெஸ்ட்

மேலும் அதற்கான விடையையும் அவர்கள் கண்டுபிடிக்க தவறி விட்டார்கள். நேற்று மதிய உணவிற்கு பிறகு அவர்கள் வீசிய பந்துகளை தென்னாப்பிரிக்க வீரர்கள் அடித்து ஆட துவங்கி விட்டனர். அந்த தவறுகளை திருத்திக் கொண்டு மூன்றாவது நாளில் சிறப்பாக பந்துவீச வேண்டும் என்றும் அதற்கான திட்டத்தை அவர்கள் விரைவில் தீட்டுவார்கள் என்று நம்புவதாக ஜாகீர் கான் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement