16/4 என தெறிக்க விட்டு.. 20 ரன்னில் சொதப்பிய பாகிஸ்தான்.. போராடும் ஆஸி.. பரபரக்கும் 2வது டெஸ்ட்

Aus vs Pak 2
- Advertisement -

ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் 360 ரன்கள் வித்தியாசத்தில் வென்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டிசம்பர் 26ஆம் தேதி மெல்போர்ன் நகரில் துவங்கிய 2வது போட்டியில் நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா போராடி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 318 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக மார்னஸ் லபுஸ்ஷேன் 63, மிட்சேல் மார்ஷ் 41, உஸ்மான் கவாஜா 42 ரன்கள் எடுக்க பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக அமீர் ஜமால் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அப்துல்லா ஷபிக் 62, கேப்டன் ஷான் மசூட் 54 ரன்கள் எடுத்ததால் 124/1 என்ற நல்ல துவக்கத்தை பெற்றது.

- Advertisement -

பரபரக்கும் 2வது டெஸ்ட்:
ஆனால் அதன் பின் வந்த வீரர்களை குறைந்த ரன்களில் அவுட்டாக்கி பாகிஸ்தானை 264 ரன்களுக்கு ஆல் அவுட் செய்த ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக கேப்டன் பட் கமின்ஸ் 5, நேதன் லயன் 4 விக்கெட்களை சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 54 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு உஸ்மான் கவாஜாவை டக் அவுட்டாக்கிய ஷாஹீன் அப்ரிடி அடுத்து வந்த மார்னஸ் லபுஸ்ஷேனை 4 ரன்களில் காலி செய்தார்.

அத்துடன் மற்றொரு துவக்க வீரர் டேவிட் வார்னரை 6 ரன்களில் கிளீன் போல்ட்டாக்கிய மிர் ஹம்சா அடுத்ததாக வந்த டிராபிஸ் ஹெட்டையும் கோல்டன் டக் அவுட்டாக்க தெறிக்க விட்டார். அதனால் 16/4 என்ற படுமோசமான துவக்கத்தை பெற்ற ஆஸ்திரேலியா 150 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்ட போது நங்கூரத்தை போட்ட ஸ்டீவ் ஸ்மித் களத்தில் படுத்து தூங்கும் அளவுக்கு நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

ஆனால் எதிர்ப்புறம் வந்த மிட்சேல் மார்ஷ் சற்று அதிரடி காட்ட முயற்சித்த போது 20 ரன்களில் கொடுத்த அழகான கேட்ச்சை மீண்டும் அப்துல்லா ஷபிக் கோட்டை விட்டது பாகிஸ்தான் ரசிகர்களையும் வீரர்களையும் உச்சகட்ட கோபத்தில் ஆழ்த்தியது. ஏனெனில் முதல் இன்னிங்ஸில் இதே போல் டேவிட் வார்னர் கொடுத்த அழகான கேட்ச்சை அவர் கோட்டை விட்டது பாகிஸ்தானுக்கு பின்னடைவாக அமைந்தது.

இதையும் படிங்க: உலகிலேயே ரொம்ப மோசம்.. பாகிஸ்தானுக்கு சான்ஸே இல்ல.. யுவிக்கு கெளதம் கம்பீர் பதிலடி

இம்முறை அதை பயன்படுத்திய மிட்சேல் மார்ஷ் மிகச்சிறப்பாக விளையாடி 13 பவுண்டரியுடன் சதத்தை தவற விட்டாலும் 96 ரன்கள் குவித்து ஆஸ்திரேலியாவை காப்பாற்றி ஆட்டமிழந்தார். மறுபுறம் நிதானமாக விளையாடிய ஸ்மித் 50 ரன்கள் குவித்து ஷாஹீன் அப்ரிடி வேகத்தில் அவுட்டானார். அப்போது நிறைவுக்கு வந்த 3வது நாள் ஆட்டத்தின் முடிவில் 187/6 ரன்கள் எடுத்துள்ள ஆஸ்திரேலியா 241 ரன்கள் முன்னிலையுடன் வெற்றிக்கு போராடி வருகிறது. மறுபுறம் கடுமையாக போராடும் பாகிஸ்தான் ஃபீல்டிங்கில் சொதப்பியதால் பின்தங்கியுள்ளது என்றே சொல்லலாம்.

Advertisement