உலகிலேயே ரொம்ப மோசம்.. பாகிஸ்தானுக்கு சான்ஸே இல்ல.. யுவிக்கு கெளதம் கம்பீர் பதிலடி

Gambhir Yuvraj Singh
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் மிகச் சிறப்பாக விளையாடிய இந்தியா இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்தது. அதனால் 2011 போல சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் பொன்னான வாய்ப்பை இந்திய அணி கோட்டை விட்டது ரசிகர்களை சோகமடைய வைத்தது. இதைத் தொடர்ந்து 2024 டி20 உலகக் கோப்பையை வெல்லும் பயணத்தை இந்தியா துவங்கியுள்ளது.

அதற்கு தயாராவதற்காக நடைபெற்ற ஆஸ்திரேலிய டி20 தொடரில் 3 – 2 (5) என்ற கணக்கில் வென்ற இந்திய அணி அடுத்ததாக நடைபெற்ற தென்னாப்பிரிக்க தொடரை 1 – 1 (3) என்ற கணக்கில் சமன் செய்தது. அதனால் வழக்கம் போல வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ள 2024 டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்லும் என்ற நம்பிக்கையுடன் மீண்டும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

- Advertisement -

கம்பீர் பதிலடி:
அந்த சூழ்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற தம்ப்ஸ் அப் நிகழ்ச்சியில் 2024 டி20 உலகக் கோப்பையை வெல்லப்போவது யார் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு முன்னாள் இந்திய ஜாம்பவான் யுவராஜ் சிங் தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். குறிப்பாக பாகிஸ்தான் அணி 20 ஓவர் கிரிக்கெட்டில் ஆபத்தானவர்களாக செயல்படுவதற்கு வாய்ப்புள்ளதாக யுவராஜ் கூறினார்.

இருப்பினும் அதை ஏற்றுக் கொள்ளாத மற்றொரு முன்னாள் இந்திய வீரர் கௌதம் கம்பீர் உலகிலேயே ஃபீல்டிங் செய்வதில் மோசமாக செயல்பட்டு வரும் பாகிஸ்தான் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு என யுவராஜுக்கு பதிலளித்தார். மேலும் தொடர்ந்து நாக் அவுட் சுற்றை தொட்டு வரும் இந்தியா விரைவில் ஐசிசி கோப்பையை வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்த கம்பீர் இது பற்றி அதே நிகழ்ச்சியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“பாகிஸ்தான் அணியின் ஃபீல்டிங்கை பாருங்கள். கடந்த 50 ஓவர் உலகக் கோப்பையில் அவர்கள் வெளிப்படுத்திய ஃபீல்டிங் சர்வதேச கிரிக்கெட்டில் மிகவும் மோசமான ஒன்றாக இருந்தது. எனவே அவர்கள் டி20 கிரிக்கெட்டில் வெல்ல வேண்டுமெனில் முதலில் அந்த துறையில் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியமாகும். மறுபுறம் இந்தியா அதிக முறை ஃபைனலுக்கு தகுதி பெற்றுள்ளது”

இதையும் படிங்க: டீம் லிஸ்ட்லயே இல்லாத ரிங்கு சிங்கை பீல்டிங் செய்ய வைத்த இந்திய அணி. இப்படி செய்யலாமா? – விதிமுறை கூறுவது என்ன?

“என்னை கேட்டால் கடந்த 5 – 6 வருடங்களில் இந்தியா ஃபைனலுக்கு தகுதி பெற்ற எண்ணிக்கையை பாகிஸ்தான் நெருங்க கூட முடியாது. அந்த வகையில் இந்தியா உலகக் கோப்பையை வெல்வதற்கு இன்னும் ஒரு படி மட்டுமே பின்தங்கியுள்ளது. எனவே டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்லும் என்று நம்புகிறேன்” என கூறினார். அவர் கூறுவது போல உலகக்கோப்பை மட்டுமின்றி நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரிலும் பாகிஸ்தான் அணியின் ஃபீல்டிங் மோசமாக இருப்பது குறிப்பிடப்பட்டது.

Advertisement