டீம் லிஸ்ட்லயே இல்லாத ரிங்கு சிங்கை பீல்டிங் செய்ய வைத்த இந்திய அணி. இப்படி செய்யலாமா? – விதிமுறை கூறுவது என்ன?

Rinku-Singh
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம்பெறாத ரிங்கு சிங் பீல்டிங் செய்ததை நாம் காண முடிந்தது. இப்படி இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் பட்டியலிலேயே இல்லாத ஒருவர் எப்படி பீல்டிங் செய்யலாம் என்ற கேள்வியும் அனைவரது மத்தியில் எழுந்துள்ளது.

அந்த வகையில் எந்த விதிமுறையின் அடிப்படையில் நேற்றைய போட்டியில் ரிங்கு சிங் பீல்டிங் செய்தார்? இப்படி செய்யலாமா? என்பது குறித்த தெளிவான விளக்கத்தை தான் நாங்கள் இங்கே உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம். அதன்படி ஐசிசி கூறும் விதிமுறை யாதெனில் :

- Advertisement -

ஒரு டெஸ்ட் போட்டிக்கான அணியில் விளையாடும் பிளேயிங் லெவன் வீரர்களை தவிர்த்து மேலும் 3 வீரர்களை நாம் சப்ஸ்டிடியூட் வீரர்களாக டெஸ்ட் அணியில் இணைத்துக் கொள்ளலாம். அதேபோன்று சப்ஸ்டிடியூட்டாக இருக்கும் வீரர்களுக்கும் ஏதேனும் அசவுகரியம் ஏற்பட்டு இருந்தால் அவருக்கு பதிலாக மற்றொரு வீரராக அணியில் இல்லாத வீரரை பயன்படுத்திக் கொள்ளலாம்.

அந்த வகையில் இந்திய அணியின் பிளேயிங் லெவனை தவிர்த்து மூன்று மாற்று வீரர்களாக கே.எஸ் பரத், ரவீந்திர ஜடேஜா மற்றும் முகேஷ்குமார் ஆகியோரது பெயர்கள் இடம் பெற்றிருந்தன. அதில் ஜடேஜா மட்டும் காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் வேளையில் அவருக்கு மாற்றாக தான் ரிங்கு சிங் பீல்டிங் செய்ய அனுப்பப்பட்டார்.

- Advertisement -

விதிமுறைப்படி இது இதில் தவறு ஒன்றும் கிடையாது. ஏனெனில் ஐசிசி-யின் விதிமுறைப்படி ஆர்டிகல் 1.2.2 என்கிற விதிமுறையின் படி : ஒரு டெஸ்ட் போட்டிக்கான அணியில் பிளேயிங் லெவன் வீரர்களை தவிர்த்து ஆறு வீரர்களை இந்திய அணி மாற்று வீரர்களாக அணியில் வைத்துக் வைத்துக்கொள்ள முடியும். அதே போன்று பட்டியலில் இல்லாத வீரர் வெளியில் இருந்தாலும் அவரையும் மாற்று வீரராக பீல்டிங் செய்ய வைக்கலாம். ஆனால் அவர்கள் பேட்டிங்கோ, பவுலிங்கோ மட்டும் தான் செய்யக்கூடாது.

இதையும் படிங்க : பும்ராவும் இப்படி தான் கஷ்டப்பட்டாரு.. கண்டிப்பா கம்பேக் கொடுப்பாரு.. இந்திய வீரருக்கு சஞ்சய் பங்கர் ஆதரவு

இதே போன்று அணியில் இடம்பெறாத வீரர் டெஸ்ட் போட்டிகளில் பீல்டராக செயல்பட்டது இது முதல் முறை கிடையாது. ஏற்கனவே பல்வேறு முறை நடைபெற்றுள்ளன. ஒரு சில சமயங்களில் வீரர்கள் பீல்டிங் செய்ய முடியாமல் போகும் பட்சத்தில் பயிற்சியாளர்களே பீல்டிங் செய்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இப்படி செய்யக்கூடாது ஆனால் டெஸ்ட் போட்டிகளுக்கு இப்படி ஒரு தளர்வு விதிமுறையில் உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement