பும்ராவும் இப்படி தான் கஷ்டப்பட்டாரு.. கண்டிப்பா கம்பேக் கொடுப்பாரு.. இந்திய வீரருக்கு சஞ்சய் பங்கர் ஆதரவு

Sanjay bangar
- Advertisement -

சென்சூரியன் நகரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா தடுமாற்றமாக செயல்பட்டு வருகிறது. டிசம்பர் 26ஆம் தேதி துவங்கிய அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா கடுமையாக போராடி 245 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கே.எல் ராகுல் 101 ரன்கள் எடுக்க தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக ககிஸோ ரபாடா 5 விக்கெட்டுகள் சாய்த்தார்.

அதை தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா 2வது நாள் முடிவில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி 256/5 ரன்கள் குவித்து இந்தியாவை விட 11 ரன்கள் முன்னிலை பெற்று அசத்தியுள்ளது. அந்த அணிக்கு களத்தில் அனுபவ வீரர் டீன் எல்கர் சதமடித்து 140* ரன்கள் எடுத்துள்ள நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக பும்ரா, சிராஜ் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்து போராடி வருகின்றனர்.

- Advertisement -

தடுமாறிய பும்ரா:
முன்னதாக இப்போட்டியில் அறிமுகமாக களமிறங்கிய இளம் வீரர் பிரசித் கிருஷ்ணா பந்து வீச்சில் எதிர்பார்த்ததை விட சுமாராக செயல்பட்டு இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தினார். குறிப்பாக காயமடைந்து வெளியேறிய முகமது ஷமிக்கு பதிலாக வாய்ப்பு பெற்ற அவர் இதுவரை வீசியுள்ள 15 ஓவரில் 61 ரன்களை கொடுத்து 1 விக்கெட் மட்டுமே எடுத்து பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் தடுமாற்றமாக பந்து வீசி வருகிறார்.

இந்நிலையில் 2018 தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் அறிமுகமான ஜஸ்பிரித் பும்ரா கூட முதல் போட்டியிலேயே ரன்களை வாரி வழங்கியதாக முன்னாள் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார் கூறியுள்ளார். எனவே இந்த போட்டியில் பிரசித் கிருஷ்ணா கம்பேக் கொடுப்பார் என்று நம்பிக்கை தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இது நடக்கும் என்று நான் கருதுகிறேன். இது ஜஸ்பிரித் பும்ரா போன்றவருக்கும் நடைபெற்றது”

- Advertisement -

“குறிப்பாக கேப் டவுனில் நடைபெற்ற தன்னுடைய முதல் போட்டியில் பும்ராவுக்கு என்ன நடந்தது என்பது இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. முதல் நாளிலேயே அவர் 60 – 70 ரன்கள் கொடுத்தார். இருப்பினும் அதன் பின் தன்னுடைய இயற்கையான லென்த்தை பின்பற்றி அவர் சிறப்பாக செயல்பட்டார். அதைத்தான் நீங்கள் இங்கே பார்க்கிறீர்கள். பிரசித் கிருஷ்ணாவிடம் அணி நிர்வாகம் எதிர்பார்த்த செயல்பாடுகள் முதல் முயற்சியிலேயே பலனை தரவில்லை”

இதையும் படிங்க: அன்று என்னை திட்டுன அவங்களுக்கு இனிமேல் பேட் தான் பேசும்.. கம்பேக் கொடுத்த ராகுல் பேட்டி

“ஆனால் 2வது ஸ்பெல்லில் அவர் ஸ்விங்கை தேடாமல் கடினமான லென்த்தை அடித்து பந்து வீசினார். அந்த வகையில் இப்போதும் அவர் கையளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறார். தங்களுடைய டெஸ்ட் கேரியரை சுமாராக துவங்கிய பல வீரர்களில் பிரசித் கிருஷ்ணா மட்டும் ஒருவரல்ல” என்று கூறினார். அவர் கூறுவது போல ஆரம்பத்திலேயே அனைவரும் தடுமாறுவது சகஜம் என்ற நிலையில் பிரசித் கிருஷ்ணாவும் அசத்துவார் என்று நம்பலாம்.

Advertisement