அன்று என்னை திட்டுன அவங்களுக்கு இனிமேல் பேட் தான் பேசும்.. கம்பேக் கொடுத்த ராகுல் பேட்டி

Umpire Lift
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சென்சூரியன் நகரில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 245 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக கேஎல் ராகுல் சதமடித்து 101 ரன்கள் எடுத்த நிலையில் தென்னாபிரிக்கா சார்பில் அதிகபட்சமாக ககிஸோ ரபாடா 5 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 2வது நாள் முடிவில் 256/5 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக அனுபவ வீரர் டீன் எல்கர் சதமடித்து 140* ரன்கள் குவித்து இந்தியாவுக்கு சவாலை கொடுத்து வருகிறார். முன்னதாக இந்த போட்டியில் பேட்டிங்க்கு சவாலான பிட்ச்சில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற முக்கிய வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்காமல் ஏமாற்றத்தை கொடுத்ததால் 101/5 என சரிந்த இந்தியா 200 ரன்கள் தாண்டாது என்று பார்க்கப்பட்டது.

- Advertisement -

பேட் பேசும்:
இருப்பினும் மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடிய கேஎல் ராகுல் 14 பவுண்டரி 4 சிக்ஸருடன் சதமடித்து தென்னாபிரிக்க மண்ணில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த இந்திய விக்கெட் கீப்பராக சாதனை படைத்து ஓரளவு காப்பாற்றினார். மேலும் 2023 ஐபிஎல் தொடரில் சந்தித்த காயத்திலிருந்து குணமடைந்த பின் 2023 ஆசிய மற்றும் உலகக்கோப்பையில் மிடில் ஆர்டரில் அபாரமாக விளையாடி பெரிய ரன்கள் குவித்து வெற்றியில் பங்காற்றிய அவர் தற்போது முழுமையான ஃபார்முக்கு திரும்பி கம்பேக் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் இன்று தம்மை பாராட்டும் ரசிகர்கள் சில மாதங்களுக்கு முன்பாக மோசமாக திட்டியதாக கேஎல் ராகுல் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இருப்பினும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தம்முடைய வேலையில் கவனம் செலுத்தி விமர்சனங்களுக்கு பேட்டால் பதிலடி கொடுத்துள்ளதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி ஐசிசி இணையத்தில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ஒரு வீரராகவும் மனிதராகவும் ஒவ்வொரு நாளும் நீங்கள் சவாலை சந்திக்கிறீர்கள். சமூக வலைதளங்கள் என்பது அழுத்தமான இடமாகும். இன்று நான் சதம் அடித்துள்ளதால் மக்கள் பாராட்டுகின்றனர். ஆனால் 3 – 4 மாதங்கள் முன்பாக என்னை அனைவரும் திட்டினார்கள். இதுவும் விளையாட்டின் அங்கமாகும். ஆனால் இது என்னை பாதித்தது என்று நான் சொல்ல மாட்டேன்”

இதையும் படிங்க: 9 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய அணிக்கெதிராக சாதனையை நிகழ்த்திய டீன் எல்கர் – விவரம் இதோ

“அதிலிருந்து நீங்கள் விலகியிருப்பது உங்களுடைய விளையாட்டுக்கும் மனதிற்கும் நல்லதாகும். அதே சமயம் விமர்சனங்களை யாராலும் முழுவதுமாக தவிர்க்க முடியாது. அது அனைவரையும் பாதிக்கக் கூடியது. ஒருவேளை யாராவது விமர்சனங்கள் தங்களை பாதிக்கவில்லை என்று சொன்னால் அது பொய்யாகும். அதற்கெல்லாம் பதிலாக என்னுடைய பேட்டை நான் பேச வைப்பேன்” என்று கூறினார்.

Advertisement