9 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய அணிக்கெதிராக சாதனையை நிகழ்த்திய டீன் எல்கர் – விவரம் இதோ

Dean-Elgar
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது கடந்த டிசம்பர் 26-ம் தேதி செஞ்சுரியன் நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணியானது :

கே.எல் ராகுலின் அற்புதமான சதம் காரணமாக 245 ரன்களை எடுத்தது. அதனைத்தொடர்ந்து விளையாடி வரும் தென்னாப்பிரிக்க அணியானது நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் தங்களது முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை இழந்து 256 ரன்களை குவித்திருந்தது.

- Advertisement -

தென்னாப்பிரிக்க அணி சார்பாக அந்த அணியின் துவக்கவீரர் டீன் எல்கர் 140 ரன்களுடன் களத்தில் உள்ளார். அதே போன்று மார்க்கோ யான்சன் 3 ரன்களுடன் விளையாடி வருகிறார். மேலும் இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் மேலும் தென்னாப்பிரிக்கா அணி ரன்களை சேர்க்கும் என்பதால் நிச்சயம் 50 முதல் 100 ரன்கள் வரை முன்னிலை பெறுவது உறுதி.

இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான இந்த தொடரை தனது கடைசி தொடராக விளையாடி வரும் 36 வயதான டீன் எல்கர் இந்திய அணிக்கெதிரான இந்த போட்டியின் மூலம் 9 ஆண்டுகளுக்கு பிறகு அற்புதமான சாதனை ஒன்றை நிகர்தினை அசத்தியுள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் கடந்த 2014-ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற போட்டியில் அடிக்கப்பட்ட டெஸ்ட் சதத்திற்கு பிறகு தற்போது தான் ஒன்பது ஆண்டுகள் கழித்து தென் ஆப்பிரிக்க வீரர் ஒருவர் அங்கு நடைபெறும் போட்டியில் சதம் அடித்துள்ளார்.

இதையும் படிங்க : வரலாறு காணாத காரணத்தால் நிறுத்தப்பட்ட போட்டி.. நேரலையில் நிகழ்ந்த காமெடி.. சிரித்த வார்னர்.. நடந்தது என்ன?

மேலும் தென்னாபிரிக்காவில் உள்ள ஏழு வெவ்வேறு மைதானங்களில் சதம் விளாசிய இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் டீன் எல்கர் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement