11 ஒய்ட்ஸ்.. கடைசி பந்தில் 6.. சொந்த மண்ணில் இளம் நியூசிலாந்து அணியிடம்.. பாகிஸ்தானுக்கு நேர்ந்த சோகம்

- Advertisement -

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் கேன் வில்லியம்சன், ட்ரெண்ட் போல்ட் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் விளையாடுகின்றனர். எனவே இந்த தொடரில் மைக்கேல் பிரேஸ்வல் தலைமையில் இளம் வீரர்களை கொண்ட இரண்டாவது தர நியூசிலாந்து அணி களமிறங்கியுள்ளது.

மறுபுறம் இத்தொடரில் மீண்டும் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள பாபர் அசாம் தலைமையில் முகமது அமீர் போன்ற முதன்மை வீரர்களைக் கொண்ட வலுவான பாகிஸ்தான் அணி நியூசிலாந்தை எதிர்கொண்டு வருகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் துவங்கிய இந்த தொடரின் முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில் 2வது போட்டியில் பாகிஸ்தான் வென்றது. ஆனால் 3வது போட்டியில் மீண்டும் வென்ற நியூஸிலாந்து தொடரை சமன் செய்தது.

- Advertisement -

11 ஒய்ட்:
அந்த சூழ்நிலையில் இத்தொடரின் முக்கியமான நான்காவது போட்டி ஏப்ரல் 25ஆம் தேதி லாகூர் நகரில் நடைபெற்றது. அந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து 20 ஓவரில் போராடி 178/7 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டிம் ராபின்சன் 51 (36), பாக்ஸ்க்ரோப்ட் 34 (26), கேப்டன் மைக்கேல் பிரேஸ்வெல் 27 (20), டாம் பிளண்டல் 28 (15) ரன்கள் எடுத்தனர்.

பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக அப்பாஸ் அப்ரடி 3 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத்தொடர்ந்து 179 ரன்களை துரத்திய பாகிஸ்தானுக்கு சாய்ம் ஆயுப் 20, கேப்டன் பாபர் அசாம் 5, உஸ்மான் கான் 16, ஷடாப் கான் 7 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 79/4 என தடுமாறிய பாகிஸ்தானுக்கு 5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து 59 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இப்திகார் அகமது 23 ரன்களில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

அடுத்த சில ஓவரிலேயே மறுபுறம் அசத்தலாக விளையாடிய பஃகார் ஜமானும் அரை சதமடித்து 61 (45) ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் ல் கடைசியில் அப்பாஸ் அப்ரிடி 1, உசாமா மிர் 5 ரன்களில் அவுட்டானாலும் இமாத் வாசிம் அதிரடியாக விளையாடியதால் பாகிஸ்தான் வெற்றியை நெருங்கியது. குறிப்பாக கடைசி 2 பந்தில் 10 ரன்கள் தேவைப்பட்ட போது அவர் 5வது பந்தில் பவுண்டரி அடித்தார்.

ஆனால் ஜிம்மி நீசம் வீசிய கடைசி பந்தில் 6 ரன் தேவைப்பட்ட போது சிங்கிள் மட்டுமே எடுத்த இமாத் வாசிம் மொத்தம் 22* (11) ரன்கள் எடுத்தும் ஃபினிஷிங் செய்ய முடியவில்லை. அதனால் 20 ஓவரில் 174/8 ரன்கள் மட்டுமே எடுத்த பாகிஸ்தான் பரிதாபமாக தோற்றது மைதானத்தில் இருந்த அந்நாட்டு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

இதையும் படிங்க: கன்ட்ரோல் பண்ண முடிஞ்சதை செஞ்சேன்.. ஹைதெராபாத் அணியை வீழ்த்திய ஆட்டநாயகன் ரஜத் படிதார் பேட்டி

மறுபுறம் இளம் வீரர்களை வைத்தே வெறும் 4 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து வென்றது. அதன் காரணமாக 2 – 1* (5) என்ற கணக்கில் இத்தொடரில் முன்னிலை பெற்றுள்ள நியூஸிலாந்து கடைசி போட்டியில் தோற்றாலும் கோப்பையை பகிர்ந்து கொள்ளும் பொன்னான வாய்ப்பை இப்போதே பெற்றுள்ளது. மறுபுறம் இப்போட்டியில் பந்து வீச்சில் 11 ஒய்ட்களை பாகிஸ்தான் பவுலர்கள் போட்டுத் தள்ளியது அந்த அணியின் தோல்விக்கு முக்கிய காரணமானது.

Advertisement