கன்ட்ரோல் பண்ண முடிஞ்சதை செஞ்சேன்.. ஹைதெராபாத் அணியை வீழ்த்திய ஆட்டநாயகன் ரஜத் படிதார் பேட்டி

Rajat Paditar
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 25ஆம் தேதி நடைபெற்ற 41வது லீக் வலுவான ஹைதராபாத் அணியை பெங்களூரு 35 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. ஹைதராபாத் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய பெங்களூரு 20 ஓவரில் 206/7 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரஜத் படிடார் 50, விராட் கோலி 51 ரன்கள் எடுத்தனர்

ஹைதராபாத் சார்பில் அதிகபட்சமாக ஜெயதேவ் உனட்கட் 3, நடராஜன் 2 விக்கெட்டுகள் எடுத்தனர். தொடர்ந்து 207 ரன்களை ஹைதராபாத் அணிக்கு காட்டுதனமாக அடிக்கக்கூடிய டிராவிஸ் ஹெட் 1, ஐடன் மார்க்ரம் 7, அபிஷேக் சர்மா 31, ஹென்றிச் க்ளாஸென் 7, நிதிஷ் ரெட்டி 13 என முக்கிய வீரர்கள் அனைவரும் பெங்களூருவின் தரமான பந்து வீச்சில் சொற்ப ரன்களில் அவுட்டாகி பெரிய ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

ஆட்டநாயகன் படிடார்:
கடைசியில் சபாஷ் அகமது 40*, கேப்டன் பட் கமின்ஸ் 31 ரன்கள் எடுத்தும் 20 ஓவரில் ஹைதராபாத்தை 171/8 ரன்களுக்கு கட்டுப்படுத்திய பெங்களூரு 6 தோல்விகளுக்கு பின் இரண்டாவது வெற்றியை பதிவு செய்து நிம்மதியடைந்தது. அதனால் 287 ரன்கள் அடித்து நொறுக்கிய ஹைதராபாத் அணியை இப்போட்டியில் தோற்கடித்த பெங்களூரு தக்க பதிலடி கொடுத்து பழி தீர்த்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கரண் சர்மா, கேமரூன் கிரீன், ஸ்வப்னில் சிங் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

இந்த வெற்றிக்கு வெறும் 20 பந்தில் 2 பவுண்டரி 5 சிக்ஸருடன் 50 (20) ரன்கள் விளாசி முக்கிய பங்காற்றிய ரஜத் படிதார் ஆட்டநாயக்கன் விருதை வென்றார். இந்நிலையில் ஒவ்வொரு முறை தவறு செய்யும் போதும் அதை வீட்டுக்கு சென்று பயிற்சிகளை எடுத்து சரி செய்து முன்னேறுவதாக ரஜத் படிதார் கூறியுள்ளார். மேலும் இப்போட்டியில் அதிகமாக சிந்திக்காமல் தம்மால் கட்டுப்படுத்த முடிந்ததை மட்டும் கட்டுப்படுத்தி பேட்டிங் செய்ததாக கூறும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“நான் கட்டுப்படுத்தக் கூடியவற்றை கட்டுப்படுத்துவதற்கான விஷயங்களை மட்டும் என் மனதில் வைத்திருந்தேன். நீண்ட காலமாக நான் செய்ததை தொடர்ந்து செய்ய முயற்சிக்கிறேன். என்னுடைய மனநிலை மற்றும் பேட்டிங் டெக்னிக் ஆகியவை முக்கியம். நான் என்னுடைய வீட்டிற்கு திரும்பும் போதெல்லாம் அதில் உள்ள ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் தீர்வு காண முயற்சிப்பேன்”

இதையும் படிங்க: 30 நாட்கள் தவம்.. காட்டடி ஹைதெராபாத் அணியை அடக்கிய ஆர்சிபி.. சிஎஸ்கே, மும்பையால் முடியாத மாஸ் வெற்றி

“இன்று ஸ்பின்னர்கள் உட்பட எதிர்கொண்ட ஒவ்வொரு பவுலர்களையும் சிறப்பாக அடிப்பதற்கான வடிவம் எனக்கு கிடைத்தது” என்று கூறினார். அந்த வகையில் காட்டுத்தனமாக அடித்து வந்த ஹைதராபாத் அணியிடம் மும்பை, சென்னை போன்ற அணிகள் தோல்வியை சந்தித்து வந்தன. ஆனால் அந்த அணியை இந்த வருடம் தோற்கடித்த முதல் அணியாக பெங்களூரு அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement