தல தோனியின் வாழ்நாள் சாதனையை 12 வருடத்திலேயே தகர்த்த ஜடேஜா.. சிஎஸ்கே அணிக்காக வரலாற்று சாதனை

jadeja CSk
- Advertisement -

ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் 53வது லீக் போட்டியில் பஞ்சாப்பை 28 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை தோற்கடித்தது. மே ஐந்தாம் தேதி தரம்சாலா நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை 168 ரன்களை இலக்காக கொடுத்தது. அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 43, கேப்டன் ருதுராஜ் 32, டேரில் மிட்சேல் 30 ரன்கள் எடுத்தனர்.

ஆனால் அதைத் துரத்திய பஞ்சாப் அணி ஆரம்பம் முதலே சென்னையின் தரமான பந்து வீச்சில் அதிரடியாக விளையாட முடியாமல் 20 ஓவரில் 139/9 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ப்ரப்சிம்ரன் சிங் 30, சசாங் சிங் 27 ரன்கள் எடுத்த நிலையில் சென்னை சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதனால் 11 போட்டிகளில் சென்னை 6வது வெற்றியை பதிவு செய்தது.

- Advertisement -

சிஎஸ்கே நாயகன்:
அதன் காரணமாக புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறிய சென்னை பிளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. அத்துடன் 3 வருடங்கள் கழித்து 5 தொடர் தோல்விகளுக்கு பின் பஞ்சாப்பை தோற்கடித்து சென்னை வெற்றி கண்டது. இந்த வெற்றிக்கு சந்தேகமின்றி பேட்டிங்கில் 43 ரன்கள் பந்து வீச்சில் 3 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

இதையும் சேர்த்து ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ரவீந்திர ஜடேஜா 16வது முறையாக ஆட்டநாயகன் விருது வென்றுள்ளார். இதன் வாயிலாக ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக அதிக முறை ஆட்டநாயகன் விருது வென்ற வீரர் என்ற ஜாம்பவான் தோனியின் வாழ்நாள் சாதனையை உடைத்த அவர் புதிய வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ரவீந்திர ஜடேஜா : 16*
2. எம்எஸ் தோனி : 15
3. சுரேஷ் ரெய்னா : 12
4. ருதுராஜ் கைக்வாட் : 11
5. மைக் ஹசி : 10

- Advertisement -

குறிப்பாக 2008 முதல் சென்னை அணிக்காக விளையாடி வரும் தோனி 17 வருடங்களில் 15 ஆட்டநாயகன் விருது வென்றுள்ளார். ஆனால் 2012இல் சென்னை அணிக்காக விளையாடத் துவங்கிய ஜடேஜா தற்போது 13வது வருடத்திலேயே தோனியின் ஆல் டைம் சாதனையை உடைத்து சிஎஸ்கே அணியின் புதிய நாயகனாக உருவெடுத்துள்ளார்.

இதையும் படிங்க: காய்ச்சலால் போன மேட்ச் முடியல.. 2 காட்டடி பஞ்சாப் பேட்ஸ்மேன்களை காலி செய்தது பற்றி பேசிய தேஷ்பாண்டே

இது போக ஐபிஎல் தொடரில் அதிக முறை ஒரு போட்டியில் 40+ ரன்கள் மற்றும் 3 விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற ஷேன் வாட்சன், யுவராஜ் சிங் ஆகியோரின் சாதனையையும் ரவீந்திர ஜடேஜா சமன் செய்துள்ளார். இந்த 3 பேருமே ஐபிஎல் தொடரில் அதிகபட்சமாக 3 முறை ஒரு போட்டியில் 40+ ரன்கள் மற்றும் 3 விக்கெட்டுகள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement