எனக்கோ தோனிக்கோ இல்ல.. 2011 உ.கோ ஃபைனல் ஆட்டநாயகன் விருதை அவருக்கு கொடுத்திருக்கணும்.. கம்பீர் ஆதங்கம்

Gautam Gambhir
- Advertisement -

உலக கிரிக்கெட்டின் புதிய சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்காக இந்திய மண்ணில் நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அனைத்து அணிகளும் போட்டியிட்டு வருகின்றன. அதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா இதுவரை பங்கேற்ற 3 போட்டிகளில் 3 வெற்றிகள் பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளதால் 2011 போல கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

முன்னதாக சொந்த மண்ணில் நடைபெற்ற 2011 உலகக் கோப்பையில் தோனி தலைமையில் அனுபவம் கலந்த இளம் வீரர்களுடன் ஆரம்பம் முதலே சிறப்பாக செயல்பட்ட இந்தியா நாக் அவுட் சுற்றில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தானின் தோற்கடித்து ஃபைனலுக்கு முன்னேறியது. அதைத் தொடர்ந்து மும்பையில் நடைபெற்ற ஃபைனலில் இலங்கை நிர்ணயித்த 275 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு சச்சின், சேவாக் ஆரம்பத்திலேயே ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

தோனிக்கு கிடையாது:
அதே போல விராட் கோலியும் போராடி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் மறுபுறம் நங்கூரமாக விளையாடிய கௌதம் கம்பீருடன் சேர்ந்த கேப்டன் தோனி சிறப்பாக விளையாடி வெற்றி பாதைக்கு அழைத்து வந்தார். குறிப்பாக முரளிதரன் எதிர்கொள்வதற்காக யுவராஜ்க்கு முன்பே களமிறங்கிய அவர் தொடர் முழுவதும் தடுமாறிய போதிலும் ஃபைனலில் அபாரமாக விளையாடி 91* ரன்கள் குவித்து மறக்க முடியாத சிக்சருடன் சூப்பர் ஃபினிஷிங் கொடுத்து 28 வருடங்கள் கழித்து இந்தியா கோப்பையை முத்தமிட உதவினார்.

அதனால் 97 ரன்கள் எடுத்த கம்பீரை விட மறக்க முடியாத ஃபினிஷிங் கொடுத்த தோனிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. ஆனால் அந்த தொடர் முடித்து 12 வருடங்கள் கடந்தும் தோனி தனி ஒருவனாக கோப்பையை வென்று கொடுக்கவில்லை என்பது போல் கௌதம் கம்பீர், ஹர்பஜன் சிங் போன்ற நிறைய முன்னாள் வீரர்கள் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்கள்.

- Advertisement -

இந்நிலையில் மாபெரும் ஃபைனலில் 97 ரன்கள் எடுத்த தம்மையும் 91* ரன்கள் எடுத்த தோனியையும் விட பந்து வீச்சில் அசத்திய ஜாகீர் கானுக்கு தான் ஆட்டநாயகன் விருது கொடுத்திருக்க வேண்டும் என்று கெளதம் கம்பீர் தற்போது மீண்டும் வித்தியாசமாக பேசியுள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “தோனிக்கு அந்த விருது கிடைத்தது. ஆனால் ஜாகிர் கான் தான் அப்போட்டியின் உண்மையான நாயகன் என்று நான் கருதுகிறேன்”

இதையும் படிங்க: இந்திய மண்ணில் பொல்லார்ட்டின் ஆல் டைம் சாதனையை உடைத்த மேக்ஸ்வெல்.. புதிய உலக சாதனை

“ஒருவேளை அவர் அந்த ஸ்பெல்லை வீசாமல் போயிருந்தால் இலங்கை 350 ரன்கள் அடித்திருக்கும். ஆனால் அவரைப் பற்றி யாரும் பேசுவதில்லை. மாறாக என்னுடைய இன்னிங்ஸ் மற்றும் தோனியின் சிக்ஸர் பற்றி மட்டுமே அனைவரும் பேசுகின்றனர். இருப்பினும் ஜாஹீர் தான் ஃபைனலின் நாயகன்” என்று கூறினார். அவர் கூறுவது போல ஃபைனலில் தன்னுடைய முதல் 5 ஓவரில் 3 மெய்டன் வீசிய ஜாஹீர் வெறும் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து இலங்கையை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தினார். அத்துடன் 2011 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பவுலராகவும் ஜாஹீர் சாதனை படைத்து வெற்றியில் பங்காற்றியது குறிப்பிடத்தக்கது.

Advertisement