இந்திய மண்ணில் பொல்லார்ட்டின் ஆல் டைம் சாதனையை உடைத்த மேக்ஸ்வெல்.. புதிய உலக சாதனை

Glenn Maxwell
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 16ஆம் தேதி லக்னோ நகரில் நடைபெற்ற 14வது லீக் போட்டியில் இலங்கையை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த ஆஸ்திரேலியா தங்களுடைய முதல் வெற்றியை பதிவு செய்தது. அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்தி வெறும் 210 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயித்தது.

குறிப்பாக அந்த அணிக்கு அதிகபட்சமாக துவக்க வீரர்கள் நிசாங்கா 61, குசால் பேரரா 78 ரன்கள் எடுத்து 125 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்தனர். ஆனால் அவர்களை தவிர்த்து மிடில் ஆர்டரில் கேப்டன் குஷால் மெண்டிஸ், அசலங்கா போன்ற முக்கிய பேட்ஸ்மேன்களை சொற்ப ரன்களில் காலி செய்து ஆரம்பத்திலேயே வெற்றியை உறுதி செய்த ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக ஆடம் ஜாம்பா 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

- Advertisement -

மேக்ஸ்வெல் சாதனை:
அதைத்தொடர்ந்து 210 ரன்களை சேசிங் செய்த ஆஸ்திரேலியாவுக்கு டேவிட் வார்னர் 11, ஸ்டீவ் ஸ்மித் 0 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். ஆனாலும் மிட்சேல் மார்ஷ் 52, லபுஸ்ஷேன் 40, ஜோஸ் இங்லிஷ் 58 ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்து ஆட்டமிழந்தனர். அதை வீணடிக்காமல் கடைசியில் கிளன் மேக்ஸ்வெல் 31* (21) ஸ்டோனிஸ் 20* (10) ரன்கள் விளாசி 35.2 ஓவரிலேயே ஆஸ்திரேலியாவுக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தனர்.

அதனால் இலங்கை சார்பில் அதிகபட்சமாக மதுசங்கா 3 விக்கெட்டுகள் எடுத்தும் வெற்றி காண முடியவில்லை. இதன் காரணமாக புள்ளி பட்டியலில் இலங்கை 10வது இடத்திற்கு சரிந்த நிலையில் ஆஸ்திரேலியா 8வது இடத்திற்கு முன்னேறியது. முன்னதாக இந்த போட்டியில் கடைசி நேரத்தில் களமிறங்கிய மேக்ஸ்வெல் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 31 ரன்கள் குவித்து ஆஸ்திரேலியாவுக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தார்.

- Advertisement -

அதை விட இப்போட்டியில் அடித்த 2 சிக்ஸர்களுடன் இந்திய மண்ணில் களமிறங்கிய டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய அனைத்து வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து இதுவரை அவர் 33 இன்னிங்ஸில் 51 சிக்ஸர்களை அடித்துள்ளார். இதன் வாயிலாக இந்திய மண்ணில் நடைபெற்ற சர்வதேச போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த வெளிநாட்டு வீரர் என்ற வெஸ்ட் இண்டீஸின் கைரன் பொல்லார்ட் சாதனையை உடைத்துள்ள மேக்ஸ்வெல் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

இதையும் படிங்க: போன மேட்ச்ல என்னால தான் பிரச்சனை வந்துச்சி. நல்லவேளை இந்த டைம் காப்பாத்திட்டேன் – ஆட்டநாயகன் ஆடம் ஜாம்பா பேட்டி

இதற்கு முன் 2011 – 2022 வரையிலான காலகட்டங்களில் இந்திய மண்ணில் களமிறங்கிய 28 சர்வதேச இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக பொல்லார்ட் 49 சிக்ஸர்கள் அடித்திருந்ததே முந்தைய சாதனையாகும். அந்த வகையில் ஐபிஎல் தொடரில் கடந்த பல வருடங்களாக விளையாடி வருவதன் காரணமாக இந்திய சூழ்நிலைகளில் மேக்ஸ்வெல் சிறப்பாக செயல்பட்டு இந்த சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement