ரிஷப் பண்ட் ஆடுறத பாத்தா எனக்கு அவர் தான் நியாபகத்துக்கு வாராரு – ஜாஹீர் கான் பெருமிதம்

Zaheer-1
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் வென்ற தென்ஆப்பிரிக்கா 1 – 0* என முன்னிலை பெற்றது. முதல் போட்டியில் பரிதாப தோல்வி அடைந்த இந்தியா கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற நிலையில் நேற்று நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதை அடுத்து பேட்டிங்கை துவக்கிய இந்தியாவிற்கு ஷிகர் தவான் 29 ரன்கள் எடுத்து அவுட்டாக அடுத்ததாக வந்த விராட் கோலி டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

pant 3

- Advertisement -

ரிஷப் பண்ட் அதிரடி :
இதனால் 64/2 என தடுமாறிய இந்தியாவை ராகுலுடன் இணைந்து 115 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மீட்டெடுத்த விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 71 பந்துகளில் அதிரடியாக 85 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இவருடன் ராகுல் 55 ரன்கள், தாகூர் 40* ரன்கள் எடுத்ததால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் தட்டுத் தடுமாறிய இந்தியா 287/6 ரன்கள் எடுத்தது.

புதிய சாதனை:
இப்போட்டியில் 85 ரன்கள் விளாசிய “ரிஷப் பண்ட் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தென்னாப்பிரிக்க மண்ணில் ஒரு போட்டியில் அதிக ஸ்கோர் அடித்த இந்திய விக்கெட் கீப்பர்” என்ற சூப்பர் சாதனையை படைத்தார். இதற்கு முன் தற்போதைய பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட் கடந்த 2001ம் ஆண்டு 77 ரன்கள் குவித்திருந்ததே சாதனையாக இருந்தது.

pant

இந்நிலையில் இந்தியாவின் முன்னாள் அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் போல ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடுவதாக இந்தியாவின் நட்சத்திர முன்னாள் வீரர் ஜஹீர் கான் பாராட்டியுள்ளார். இதுபற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசுகையில்,

- Advertisement -

“ஒரு அணியின் துருப்பு சீட்டு வீரர் என நாம் பேசும் பொழுது அந்த இடத்தில் ரிஷப் பண்ட் நினைவுக்கு வருகிறார். அவரிடம் பல்வேறு வகையான திறமைகள் உள்ளன. வெளியில் மற்றவர்கள் பேசுவதையோ அல்லது விமர்சனங்கள் செய்வதையோ பற்றி கவலை கொள்ளாத குணம் உடையவராக காணப்படுகிறார். எங்களின் காலகட்டத்தில் விரேந்திர சேவாக் இது போலவே இருந்தார்.

pant 1

அவர் மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை பற்றி கவலைப்படாமல் தனது செயலை சிறப்பாக செய்வார். அவரை போலவே பண்ட் உள்ளார், ரிஸ்க் எடுத்து விளையாடுவதை வைத்து அவரை கணக்கிட முடியாது. அவர் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு வீரர்” என தெரிவித்த ஜாஹீர் கான் ரிசப் பண்ட்டை பார்க்கும் பொழுது வீரேந்திர சேவாக்கை பார்ப்பது போலவே உணர்வதாக வெளிப்படையாக தெரிவித்தார்.

- Advertisement -

கலக்கும் பண்ட்:
ஜஹீர் கான் கூறுவது போல கடந்த சில வருடங்களாகவே ரிஷப் பண்ட் எதைப்பற்றியும் கவலைப்படாமல் அதிரடி ஆட்டத்தால் இந்தியாவிற்காக வெற்றிகளைத் தேடி கொடுத்துள்ளார். சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் கூட மற்ற இந்திய வீரர்கள் அனைவரும் சொதப்பிய வேளையில் தனி ஒருவனாக பேட்டிங் செய்த அவர் சதம் அடித்து 100* ரன்கள் குவித்தார்.

இதையும் படிங்க : சாக்கு சொல்லி எஸ்கேப் ஆகாதீங்க. அவரை பாத்து கத்துக்கோங்க – கேப்டன் ராகுலை விளாசிய ஜாஹீர் கான்

இதன் வாயிலாக “டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தென்னாப்பிரிக்க மண்ணில் சதம் விளாசிய முதல் ஆசிய விக்கெட் கீப்பர்” என்ற பெருமையையும் அவர் படைத்துள்ளார். இப்படி பல சாதனைகளை படைத்து வரும் ரிஷப் பண்ட் எந்த ஒரு சூழ்நிலையிலும் எந்த ஒரு பேட்டிங் இடத்திலும் இந்தியாவிற்காக விளையாடி வெற்றி பெற தரக்கூடிய தகுதியை மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டுமென ஜாகிர் கான் கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement