சாக்கு சொல்லி எஸ்கேப் ஆகாதீங்க. அவரை பாத்து கத்துக்கோங்க – கேப்டன் ராகுலை விளாசிய ஜாஹீர் கான்

Zaheer
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக பார்ல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் தட்டுத் தடுமாறி 287/6 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 85 ரன்களும் கேப்டன் ராகுல் 55 ரன்களும் எடுத்தார்கள். அதை அடுத்து 288 என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாபிரிக்காவின் தொடக்க வீரர்கள் குவின்டன் டி காக் மற்றும் யானெமன் மாலன் ஆகியோர் இணைந்து ஆரம்பத்திலேயே இந்திய பந்துவீச்சாளர்களை சரமாரியாக அடித்து வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார்கள்.

dekock

- Advertisement -

தென்ஆப்பிரிக்கா அபாரம்:
முதல் விக்கெட்டுக்கு 132 ரன்கள் குவித்த இந்த ஜோடியில் குவின்டன் டி காக் 66 பந்துகளில் 78 ரன்களும் மாலன் 91 ரன்கள் விளாசி இந்தியாவின் தோல்வியை உறுதி செய்து அவுட்டானார்கள். அடுத்து வந்த தெம்பா பவுமா 35 ரன்கள் மார்க்ரம் 37* ரன்கள் டுஷன் 37* ரன்கள் எடுக்க 7 விக்கெட் வித்தியாசத்தில் மீண்டும் இந்தியாவை தோற்கடித்த தென்னாப்பிரிக்கா 3 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரை 2 – 0* என கைப்பற்றியது.

மோசமான கேப்டன்ஷிப்:
இந்த தொடரில் இந்தியாவின் மிடில் ஆர்டர் பேட்டிங் மற்றும் பவுலிங் படுமோசமாக அமைந்ததே இந்த தோல்விக்கு முக்கிய பங்காற்றியது. ஆனால் அதைவிட அனுபவமில்லாத கே எல் ராகுல் செய்த மோசமான கேப்டன்ஷிப் இந்தியாவின் வெற்றிக்கு துளி அளவும் பங்க் அளிக்கவில்லை.

vanderdussen

குறிப்பாக முதல் ஒருநாள் போட்டியில் வெங்கடேஷ் ஐயரை ஆல்-ரவுண்டராக தேர்வு செய்துவிட்டு அவருக்கு ஒரு ஓவர்கூட பந்துவீச வாய்ப்பளிக்கவில்லை. இந்நிலையில் கேஎல் ராகுல் கேப்டன்ஷிப் பற்றி முன்னாள் இந்திய நட்சத்திர வீரர் ஜாஹீர் கான் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி அவர் அளித்துள்ள பேட்டியில்,
“தென்ஆப்பிரிக்கா கேப்டன் பவுமா எப்படி தனது அணியில் இருந்த திறமைகளை பயன்படுத்தினார் என்று கேஎல் ராகுல் கற்றுக்கொள்ளவேண்டும். அவர் சுழல் பந்து வீச்சு மற்றும் வேகப்பந்து வீச்சு ஆகியவற்றை தனித்தனியாக பயன்படுத்தவில்லை. எனவே உங்களிடம் இருப்பதில் சிறந்தவற்றை செயல்படுத்த வேண்டும். வெங்கடேச ஐயர் பற்றி பேசும் போது அவரை நீங்கள் ஊக்கப்படுத்த விரும்பினால் முதலில் அவருக்கு பந்துவீச வாய்ப்பளிக்க வேண்டும்.

pant4

உலக கோப்பை உள்ளிட்ட உங்களின் திட்டம் எதுவாக இருந்தாலும் அதற்கு தயாராக இதுவே தருணமாகும். தோல்விகளில் இருந்து தான் ஒரு வீரன் பாடம் கற்றுக் கொள்வான்” என தெரிவித்தார். அவர் கூறுவது போல அனுபவம் இல்லாத இளம் வீரர்களை வைத்துக்கொண்டு தென்ஆப்பிரிக்க கேப்டன் பவுமா அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றுள்ளார். ஆனால் இந்திய அணியில் வெங்கடேஷ் ஐயர் போன்ற தரமான வீரர்கள் இருந்தபோதிலும் அதை ராகுல் சரியாக பயன்படுத்தவில்லை என விமர்சித்துள்ளார்.

- Advertisement -

அத்துடன் முதல் ஒருநாள் போட்டியின்போது வெங்கடேஷ் ஐயரை பயன்படுத்த தவறிய ராகுல் ஸ்பின் மற்றும் பாஸ்ட் ஆகிய 2 பந்து வீச்சையும் கலந்து வீச வைக்காமல் தனித்தனியாக பயன்படுத்தியதாகவும் ஜாஹீர் கான் குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் தென்ஆப்பிரிக்காவோ முதல் ஒருநாள் போட்டியின் முதல் ஓவரிலேயே ஒரு சுழல் பந்து வீச்சாளரான அதுவும் பகுதி நேர சுழல் பந்து வீச்சாளரான எய்டன் மார்க்ரமை பயன்படுத்தியதுடன் சுழல் மற்றும் வேகம் என இரண்டையும் கலந்து இந்தியாவை திணறடித்து வெற்றி பெற்றது.

pant 3

தப்பிக்காதீங்க :
“முதலில் வெங்கடேஷ் ஐயருக்கு பந்துவீச வாய்ப்பளியுங்கள் அப்போதுதான் அவர் முன்னேறுவார். அவர் மட்டுமல்ல தேவையானவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் அப்போதுதான் உங்களுக்கு தேவையான வீரர்கள் கிடைப்பார்கள்” என கேஎல் ராகுல் கேப்டன்சிப் பற்றி மேலும் ஜாஹீர் கான் கூறினார். கேஎல் ராகுல் கேப்டன்ஷிப் அனுபவம் இல்லை என்பது உண்மைதான் ஆனால் அவர் இந்திய அணியில் இருக்கும் வீரர்களை சரியாக உபயோகப்படுத்தி இருந்தாலே இந்தியாவால் வெற்றியைப் பெற்றிருக்க முடியும்.

இதையும் படிங்க : ஆசிய லயன்ஸ் அணியை சாய்த்த இந்தியாவின் இர்பான் – யூசுப் பதான் சகோதரர்கள் ஜோடி – (முழு விவரம்)

எடுத்துக்காட்டாக தென்ஆப்பிரிக்காவின் தெம்பா பவுமா கேப்டனாக பெரிய அனுபவம் இல்லாதவர் ஆனாலும் அவர் தனது அணியில் உள்ள வீரர்களை கனகச்சிதமாக பயன்படுத்தியதால் வெற்றியை ருசித்து உள்ளார். எனவே எனக்கு கேப்டன்ஷிப் அனுபவம் இல்லை எனக்கூறி இந்தியாவின் தோல்வியிலிருந்து கேஎல் ராகுல் தப்ப முடியாது என்பதே உண்மையாகும்.

Advertisement