ஆசிய லயன்ஸ் அணியை சாய்த்த இந்தியாவின் இர்பான் – யூசுப் பதான் சகோதரர்கள் ஜோடி – (முழு விவரம்)

Irfan-1
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தங்களது அபார திறமையால் பல வெற்றிகளை தேடிதந்து கிரிக்கெட் ரசிகர்களின் நெஞ்சங்களில் என்றும் நீங்காத இடம்பிடித்த ஜாம்பவான் கிரிக்கெட் வீரர்கள் பங்குபெறும் “லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் லீக் தொடர்” நேற்று துவங்கியது. ஓமன் நாட்டிலுள்ள மஸ்கட் நகரில் நடைபெறும் இந்த தொடரில் இந்திய மகாராஜாஸ், ஆசிய லயன்ஸ் மற்றும் வேர்ல்டு ஜெய்ன்ஸ் உள்ளிட்ட 3 அணிகள் பங்கு பெறுகின்றன. இதில் இந்திய மகாராஜா அணிக்கு நட்சத்திர அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் தலைமை வகிக்க அதில் யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் உள்ளிட்ட பல முன்னாள் ஓய்வு பெற்ற இந்திய வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

rsw

- Advertisement -

முதல் போட்டி:
நேற்று தொடங்கிய இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய மகாராஜாஸ் அணி ஆசிய லயன்ஸ் அணியை எதிர்கொண்டது. மிஸ்பா-உல்-ஹக் தலைமையிலான ஆசிய அணிக்கு எதிரான இந்த போட்டியில் விரேந்திர சேவாக் ஓய்வு எடுத்த காரணத்தால் இந்திய அணிக்கு முகமது கைஃப் கேப்டன்ஷிப் செய்தார்.

இதில் டாஸ் வென்ற ஆசிய லயன்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்ததை அடுத்து களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்களில் இலங்கையைச் சேர்ந்த திலகரத்னே டில்சான் 5 ரன்களில் அவுட்டானார். பாகிஸ்தானைச் சேர்ந்த மற்றொரு தொடக்க வீரர் கம்ரான் அக்மல் 25 ரன்களிலும் முகமத் ஹபீஸ் 16 ரன்களிலும் அவுட் ஆனார்கள்.

yusuf

இந்திய லெஜெண்ட்ஸ் மிரட்டல் சேசிங்:
இதனால் சரிந்த அந்த அணியை இலங்கையின் உபுல் தரங்கா 66 ரன்களும் கேப்டன் மிஸ்பா உல் ஹக் 30 பந்துகளில் 44 ரன்களும் எடுத்ததால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழந்த ஆசிய லயன்ஸ் 175 ரன்கள் குவித்தது. இந்திய மஹாராஜாஸ் சார்பில் மன்பிரீத் சிங் கோனி 3 விக்கெட்டுகளும் இர்பான் பதான் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

- Advertisement -

இதை அடுத்து 176 என்ற பெரிய இலக்கை துரத்திய இந்திய மகாராஜாஸ் அணியின் தொடக்க வீரர்கள் நமன் ஓஜா 20 ரன்களிலும் ஸ்டூவர்ட் பின்னி 20 ரன்களிலும் அவுட்டாக அடுத்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த சுப்ரமணியம் பத்ரிநாத் 0 ரன்களில் ரன் அவுட் ஆனார். இதன் காரணமாக 34/3 என மோசமான தொடக்கம் பெற்று தோல்வி பெறும் நிலையில் இருந்த அந்த அணியை கேப்டன் மொஹம்மத் கைப் மற்றும் யூசுப் பதான் ஆகியோர் அதிரடியாக விளையாடி காப்பாற்றினார்கள்.

Irfan

யூசுப் பதான் – இர்பான் பதான் :
4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இவர்கள் ஆசிய அணியின் பந்து வீச்சாளர்களை சிக்ஸர்களும் பவுண்டரிகளுமாக பறக்க விட்டு 117 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றிக்கு வித்திட்டார்கள். இதில் ஒரு புறம் அதிரடியாக விளையாடிய யூசுப் பதான் 9 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் உட்பட வெறும் 40 பந்துகளில் 80 ரன்கள் விளாசி அவுட்டானார்.

- Advertisement -

மறுபுறம் பொறுமையாக விளையாடிய கைப் 42* ரன்கள் எடுக்க இறுதியில் களமிறங்கிய இர்பான் பதான் வெறும் 10 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் உட்பட 21* ரன்கள் விளாசி சிறப்பான பினிஷ்ங் செய்தார்.

இதையும் படிங்க : சறுக்கிய இந்தியாவை காப்பாற்றிய ரிஷப் பண்ட் ! ராகுல் ட்ராவிட், எம்.எஸ் தோனியை முந்தி மாஸ் சாதனை

இந்திய லெஜெண்ட்ஸ் வெற்றி:
இதனால் 19.1 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்த மகாராஜாஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றது. ஆசிய லயன்ஸ் சார்பில் ஆரம்பத்தில் அபாரமாக பந்துவீசிய சோயப் அக்தர் மற்றும் உமர் குள் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இப்போட்டியில் 80 ரன்கள் குவித்து வெற்றிக்கு வித்திட்ட யூசுப் பதான் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

Advertisement