சறுக்கிய இந்தியாவை காப்பாற்றிய ரிஷப் பண்ட் ! ராகுல் ட்ராவிட், எம்.எஸ் தோனியை முந்தி மாஸ் சாதனை

pant
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா விளையாடி வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முதலில் போட்டியில் இந்தியாவை தோற்கடித்து அபார வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா 1 – 0* என தொடரில் முன்னிலை வகிக்கிறது. இதை அடுத்து இந்தத் தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான 2வது போட்டி தென்ஆப்பிரிக்காவில் உள்ள பார்ல் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி 2 மணிக்கு துவங்கியது.

pant 3

- Advertisement -

இந்தியா முதல் பேட்டிங்:
இந்த முக்கிய போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்தியாவிற்கு தொடக்க வீரர்கள் கேஎல் ராகுல் மற்றும் ஷிகர் தவான் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 63 ரன்கள் குவித்து நல்ல தொடக்கம் கொடுத்தனர். இதில் தவான் 29 ரன்களில் அவுட்டான போது களமிறங்கிய நட்சத்திர வீரர் விராட் கோலி சற்றும் எதிர்பாரா வண்ணம் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். இதனால் நல்ல தொடக்கம் பெற்ற இந்தியா 64/2 என திடீரெனெ சறுக்கியது.

காப்பாற்றிய பண்ட்:
அதன்பின் களமிறங்கிய ரிஷப் பண்ட் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடத் தொடங்கி சறுக்கிய இந்தியாவை சரிவில் இருந்து மீள உதவினார். ஒருபக்கம் பண்ட் அதிரடியாக பேட்டிங் செய்ய மறுபுறம் ராகுல் நிதானமாக பேட்டிங் செய்ததால் 3வது விக்கெட்டுக்கு 115 பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடி இந்தியாவை ஓரளவு மீட்டனர்.

pant 2

இந்த ஜோடியில் ராகுல் 55 ரன்களில் அவுட் ஆனாலும் மறுபுறம் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த ரிஷப் பண்ட் வெறும் 71 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 2 மெகா சிக்ஸர் உட்பட 85 ரன்கள் குவித்து முக்கிய நேரத்தில் அவுட்டானார்.

- Advertisement -

288 ரன்கள் இலக்கு:
அடுத்து வந்த முக்கிய வீரர்களான ஸ்ரேயாஸ் ஐயர் 11, வெங்கடேஷ் ஐயர் 22 என சொற்ப ரன்களில் அவுட் ஆனதால் மீண்டும் சரிவை சந்தித்த இந்தியாவுக்கு கடைசி நேரத்தில் ஷார்துல் தாகூர் 40* ரன்களும், அஷ்வின் 25* ரன்களும் அடித்ததால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழந்த இந்தியா 287 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 288 என்ற இலக்கை தென்ஆப்பிரிக்கா சேசிங் செய்து வருகிறது.

pant 1

ரிஷப் பண்ட் சாதனை:
இந்த போட்டியில் 85 ரன்கள் விளாசிய ரிஷப் பண்ட் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தென்னாப்பிரிக்க மண்ணில் ஒரு போட்டியில் அதிகபட்ச ஸ்கோரை விளாசிய இந்திய விக்கெட் கீப்பர் என்ற புதிய சாதனையை ராகுல் டிராவிட் மற்றும் எம்எஸ் தோனி போன்ற ஜாம்பவான்களை முந்தி படைத்துள்ளார்.

- Advertisement -

ஒருநாள் கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்காவில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த இந்திய விக்கெட் கீப்பர்கள்:
1. ரிஷப் பண்ட் – 85 ரன்கள், பார்ல், 2022*
2. ராகுல் டிராவிட் – 77 ரன்கள், டர்பன், 2001
3. எம்எஸ் தோனி – 65 ரன்கள், ஜொஹன்ஸ்பர்க், 2013

இதையும் படிங்க : 2022 டி20 உலகக்கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியீடு – முதல் போட்டி யாருடன் தெரியுமா?

இது மட்டுமல்லாமல் ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை ஒரு சதம் கூட அடிக்காத அவர் தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளார். அந்த விவரம் இதோ:

85 V தென்ஆப்பிரிக்கா, 2022.
78 V இங்கிலாந்து, புனே, 2021
77 V இங்கிலாந்து, புனே, 2021

Advertisement