2022 டி20 உலகக்கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியீடு – முதல் போட்டி யாருடன் தெரியுமா?

Cup
- Advertisement -

ஐசிசி டி20 உலக கோப்பை 2022 கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மாதம் முதல் ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக துவங்க உள்ளது. ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்ற இந்த தொடரில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா இம்முறை தனது சொந்த மண்ணில் விளையாட உள்ளது. இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து உள்ளிட்ட உலகின் டாப் அணிகள் பங்குபெறும் இந்த தொடருக்கான முழு அட்டவணையை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது.

cup

- Advertisement -

அட்டவணை வெளியீடு :
மொத்தம் 16 அணிகள் பங்குபெறும் இந்த உலக கோப்பையானது வரும் அக்டோபர் 16ஆம் தேதி முதல் துவங்கி நவம்பர் 13ஆம் தேதி வரை கிட்டத்தட்ட ஒரு மாதம் நடைபெற உள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள புகழ்பெற்ற மெல்போர்ன், சிட்னி, அடிலெய்டு, பெர்த் ஆகிய முக்கிய 7 நகரில் உள்ள கிரிக்கெட் மைதானங்களில் இந்த உலக கோப்பை நடைபெற உள்ளது.

இந்த உலக கோப்பையில் பங்குபெறும் 16 அணிகளில் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் உள்ளிட்ட 12 ஏற்கனவே நேரடியாக தகுதி பெற்றுள்ளன. எஞ்சிய 4 அணிகள் குவாலிபயர் சுற்று வாயிலாக தேர்வு செய்யப்பட உள்ளன.

INDvsPAK

இந்தியா – பாகிஸ்தான்:

- Advertisement -

இந்த உலக கோப்பையின் முதன்மை சுற்றான சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் தொடரை நடத்தும் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் சிட்னி மைதானத்தில் மோதுகின்றன. அதைத் தொடர்ந்து அக்டோபர் 23ஆம் தேதி உலகப் புகழ்பெற்ற மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் கிரிக்கெட்டின் பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களின் முதல் லீக் போட்டியில் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

கடைசியாக கடந்த 2021 ஆம் ஆண்டு துபாயில் நடந்த டி20 உலக கோப்பை போட்டியில் வரலாற்றிலேயே முதல் முறையாக பாகிஸ்தானிடம் இந்தியா தோற்று மண்ணை கவ்வியது. எனவே இந்த உலக கோப்பையில் தோல்வியை பரிசளித்த பாகிஸ்தானுக்கு ரோகித் சர்மா தலைமையிலான புதிய இந்திய அணி பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பில் இப்போட்டிக்காக தற்போது முதலே இந்திய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

- Advertisement -

pak

முழு அட்டவணை:
முதல் சுற்று, சூப்பர் 12 சுற்று, நாக் அவுட் சுற்று உட்பட மொத்தம் 45 போட்டிகள் இந்த உலகக் கோப்பையில் நடைபெற உள்ளன. முதலில் அக்டோபர் 16 முதல் 21 வரை முதல் சுற்று நடைபெற உள்ளது. அக்டோபர் 22 முதல் நவம்பர் 6 வரை முதன்மை சுற்றான சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற உள்ளன.

இந்த உலக கோப்பையின் முதல் அரையிறுதிப் போட்டி நவம்பர் 9ஆம் தேதி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் 2வது அரையிறுதி போட்டி நவம்பர் 10ஆம் தேதி அடிலைட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த உலக கோப்பையின் மாபெரும் இறுதி போட்டி நவம்பர் 13ஆம் தேதி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

- Advertisement -

Pakistan 1

ஐசிசி உலககோப்பை 2022 முழு அட்டவணை இதோ :
இந்தியாவின் அட்டவணை :
இந்த உலக கோப்பையில் சூப்பர் 12 சுற்றின் குரூப் பி பிரிவில் இந்தியா இடம் பிடித்துள்ளது. இதே பிரிவில் இந்தியாவுடன் பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் மற்றும் முதல் சுற்றில் வெற்றிபெறும் 2 அணிகளும் இடம் பிடித்துள்ளன. சூப்பர் 12 சுற்றில் மேற்குறிப்பிட்ட இந்த அணிகளுடன் இந்தியா தலா ஒரு முறை மோத உள்ளது.

இதையும் படிங்க : டக் அவுட் ஆவதில் மோசமான சாதனையை படைத்த விராட் கோலி – இன்றைய போட்டியில் நடந்த சம்பவம்

இந்தியாவின் அட்டவணை இதோ:
இந்தியா – பாகிஸ்தான், அக்டோபர் 23, மதியம் 1.30 மணி, மெல்போர்ன்.
இந்தியா – குரூப் ஏ ரன்னர், அக்டோபர் 27, மதியம் 12.30 மணி, சிட்னி.
இந்தியா – தென்ஆப்பிரிக்கா, அக்டோபர் 30, மாலை 4.30, பெர்த்.
இந்தியா – வங்கதேசம், நவம்பர் 2, மதியம் 1.30, அடிலெய்டு.
இந்தியா – குரூப் பி வின்னர், நவம்பர் 6, மதியம் 1.30 மணி, மெல்போர்ன்.

Advertisement