டக் அவுட் ஆவதில் மோசமான சாதனையை படைத்த விராட் கோலி – இன்றைய போட்டியில் நடந்த சம்பவம்

Kohli-1
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாப தோல்வி அடைந்தது. அந்த போட்டியில் அபார வெற்றி பெற்ற தென்னாபிரிக்கா 1 – 0 என தொடரில் முன்னிலை பெற்றது. இதை தொடர்ந்து இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை வெல்ல முடியும் என்ற நிலையில் இன்று துவங்கிய 2வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.

RSA

- Advertisement -

சிறப்பான தொடக்கம்:
இந்த போட்டியில் தோல்வி அடைந்ததால் இந்திய அணியில் மாற்றம் நிகழும் என எதிர்பார்த்த நிலையில் ஆச்சர்யமாக எந்த மாற்றமும் இல்லை என கேப்டன் கேஎல் ராகுல் அறிவித்தார். தென்னாபிரிக்க அணியில் மேக்ரோ யான்செனுக்கு பதில் சிசண்டா மகாலா தேர்வு செய்யப்பட்டார். இதை அடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க வீரர்கள் கேஎல் ராகுல் மற்றும் ஷிகர் தவான் இணைந்து நிதானத்துடன் விளையாடி முதல் விக்கெட்டுக்கு 63 ரன்கள் குவித்து நல்ல தொடக்கம் கொடுத்தனர்.

கோலி டக் அவுட்:
அந்த நேரத்தில் சிறப்பாக பேட்டிங் செய்து கொண்டிருந்த ஷிகர் தவான் 38 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அப்போது களமிறங்கிய நட்சத்திர வீரர் விராட் கோலி பொறுமையாக பேட்டிங் செய்து நீண்ட நாட்களாக வராமல் அடம் பிடிக்கும் 71வது சதத்தை அடிப்பார் என இந்திய ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்தனர்.

dhawan

ஆனால் முதல் 4 பந்துகளை எதிர்கொண்ட அவர் தென்னாப்பிரிக்காவின் சுழல்பந்து வீச்சாளர் கேஷவ் மஹராஜ் வீசிய பந்தில் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட்டாகி அதிர்ச்சி தந்தார்.

- Advertisement -

மோசமான சாதனை:
கடந்த போட்டியில் 51 ரன்களை விளாசிய அவர் இப்போட்டியில் டக் அவுட்டானது அவரின் ரசிகர்கள் கடும் ஏமாற்றமடைய செய்துள்ளது. இப்போட்டியில் கேஷவ் மகாராஜ் பந்துவீச்சில் அவுட்டான “விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக ஒரு ஸ்பின் பவுலருக்கு எதிராக டக் அவுட்டாகி பரிதாபத்துக்கு உள்ளானார்”.

Kohli

அத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக முறை அவுட்டான 2-வது இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் என்ற மோசமான சாதனையை முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் உடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

- Advertisement -

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகமுறை டக் அவுட்டான இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்:

1. சச்சின் டெண்டுல்கர் : 34 டக் அவுட்
2. விராட் கோலி : 31* டக் அவுட்
3. வீரேந்திர சேவாக் : 31 டக் அவுட்
4. சௌரவ் கங்குலி : 29 டக் அவுட்

- Advertisement -

kohli 1

அது மட்டுமல்லாமல் கடந்த 2019க்கு பின் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக முறை டக் அவுட்டான இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் (1 முதல் 4 இடங்களில் களமிறங்கிய பேட்ஸ்மேன்கள்) என்ற பரிதாபத்திற்கும் உள்ளனர்.

2019 முதல் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக முறை டக் அவுட்டான டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்:

இதையும் படிங்க : டாஸ் வென்று எதிர்பார்த்த படியே மீண்டும் அதே தவறினை செய்த கேப்டன் ராகுல் – பிளேயிங் லெவன் இதோ

1. ஜானி பேர்ஸ்டோ (இங்கிலாந்து) : 11 டக் அவுட்
2. குஷால் மெண்டிஸ் (இலங்கை) : 11 டக் அவுட்
3. விராட் கோலி (இந்தியா) : 9* டக் அவுட்
4. ரோரி பர்ன்ஸ் (இங்கிலாந்து) : 9 டக் அவுட்
5. ஆரோன் பின்ச் (ஆஸ்திரேலியா) : 8 டக் அவுட்

Advertisement