டாஸ் வென்று எதிர்பார்த்த படியே மீண்டும் அதே தவறினை செய்த கேப்டன் ராகுல் – பிளேயிங் லெவன் இதோ

Rahul-toss
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி தற்போது போலந்து பார்க் மைதானத்தில் துவங்கியது. சில நிமிடங்களுக்கு முன்னர் நடைபெற்ற டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி கேப்டன் கே.எல் ராகுல் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி தற்போது இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தயாராகி வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

RSA

- Advertisement -

ஏற்கனவே முதல் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இந்திய அணி அதன் காரணமாக இந்த போட்டியில் மிடில் ஆர்டரில் சில மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் கடந்த போட்டியில் தவான் மற்றும் கோலி ஆகியோர் சிறப்பான பாட்னர்ஷிப் அமைக்க அதன்பின்னர் மிடில் ஆர்டரில் சரியான வீரர்கள் இல்லாததால் இந்திய அணி தோல்வியை சந்தித்தது.

இதன் காரணமாக இன்றைய போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் துவக்க வீரராக களமிறங்குவார் என்றும் ராகுல் மிடில் ஆர்டரில் விளையாடுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்தபடியே அணியில் எந்தவித மாற்றத்தையும் செய்யாமல் ராகுல் முதல் போட்டியில் விளையாடிய அதே அணியை களமிறக்கியுள்ளார். இதன் மூலம் அவர் மீண்டும் ஒரு முறை தவறு செய்துள்ளார்.

dhawan

ஏனெனில் தவான், ராகுல் மற்றும் விராட் கோலி ஆகிய மூவரும் ஆட்டமிழந்து வெளியேறினால் இந்திய அணி மீண்டும் சறுக்கலை சந்திக்கும். இதன் காரணமாக தற்போது ராகுல் முதல் போட்டியில் செய்த அதே தவறை செய்துள்ளார் என்றே கூறலாம். இன்றைய 2-வது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ:

- Advertisement -

இதையும் படிங்க : இந்திய அணியே தற்போது இவங்க 2 பேரால இரண்டாக பிளவு பட்டுள்ளது – டேனிஷ் கனேரியா குற்றச்சாட்டு

ஷிகர் தவான், கே.எல் ராகுல் (கேப்டன்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வென்ற சஹால், ஷார்துல் தாகூர், புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா.

Advertisement